முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ. அமொக வெற்றிபெறும் - கருத்து கணிப்பில் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றிபெறும் என்று தேர்தலுக்கு பின்பு நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 270 வார்டுகளில் 200-க்கும் மேற்பட்டவைகளில் பாரதிய ஜனதா வெற்றிபெறும் என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்கு 2-வது இடமும் காங்கிரசுக்கு 3-வது இடமும் கிடைக்கும் என்று இந்தியா டுடே-ஆக்ஸிஸ் சேர்ந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி மாநிலத்தில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த மாநகராட்சி தேர்தலில் படுதோல்வி ஏற்படும் என்றும் டெல்லி மாநகராட்சிகளில் ஏதாவது ஒன்றை பிடித்துவிட வேண்டும் என்ற காங்கிரசின் கனவு பொய்த்துவிடும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

தேர்தல் நடந்த 270 வார்டுகளில் பாரதிய ஜனதா 202 முதல் 220 வார்டுகளிலும் ஆம் ஆத்மி கட்சி 23-ல் இருந்து 35 வார்டுகளிலும் காங்கிரஸ் 19-ல் இருந்து 31 வார்டுகள் வரை வெற்றிபெறலாம் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிஓட்டர் மற்றும் ஏபிபி நடத்திய கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா 218 வார்டுகளிலும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் முறையே தலா 24 மற்றும் 22 வார்டுகளிலும் வெற்றிபெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. 2 வார்டுகளில் வேட்பாளர்கள் இறந்துவிட்டதால் அந்த வார்டுகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்