முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : மே மாதம் 7-ம் தேதி நடக்கும் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் சி.பி.எஸ்.இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோயம் புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக் கான ஹால்டிக்கெட் (அனுமதி சீட்டு) இணையதளத்தில் (cbseneet.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி, பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்த விலக்கு அளிக்க வகைசெய்யும் மசோதா, சட்டப்பேரவையில் பிப்ரவரி 1-ல் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி  ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. நாடு முழுவதும் பொதுவாக நடத்தப்படும் தேர்வுக்கு தமிழகத் துக்கு மட்டும் விலக்கு அளிக்க இயலாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago