முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணவனை இழந்தோர் நல்வாழ்வு திட்டத்தை தாக்கல் செய்யாத மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் - சுப்ரீம்கோர்ட்டு அதிரடி உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நாடு முழுவதும் கணவனை இழந்தோர் நல்வாழ்வுக்கான சீரிய திட்டத்தை சமர்பிக்காமல் கால அவகாசம் கோரியதை கண்டித்து மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுராவில் உள்ள கணவனை இழந்தோருக்கு மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை வழங்கும்படி ஆரம்பத்தில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. பின்னர் பிற மாநிலங்களிலும் இதே அணுகு முறையை நீடித்தது. மேலும் கணவனை இழந்தோர் அதிகம் உள்ள மாநிலங்களுக்குச் சென்று அவர்கள் சந்திக்கும் துயரங்கள், தேவைப்படும் உதவிகள் குறித்து ஆய்வறிக்கை சமர்பிக்கும்படி தேசிய மகளிர் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அந்த ஆய்வறிக் கையை படித்த சுப்ரீம்கோர்ட்டு  இது தொடர்பான விவாத கூட்டத்தை கூட்டும்படியும், அப்போது கணவனை இழந்தோர் நல்வாழ்வுக்கான சீரிய திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கும்படி மத்திய அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ‘‘நாட்டில் உள்ள கணவனை இழந்தோர் குறித்து உங்களுக்கு எந்த கவலை யும் இல்லை. நீங்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலும் கணவனை இழந்தோர் குறித்து கவலைப்படுவதற்கான எந்த முகாந்திரமும் குறிப்பிடப்பட வில்லை. தவிர, அவர்கள் நல் வாழ்வுக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அவர்களுக் கான உதவியை

முழுமையாக புறந்தள்ளுவது கண்டிக்கத்தக்கது.
இது தொடர்பாக ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால், நீதிமன்றம் ஆட்சியை நடத்த முயற்சிக்கிறது என குற்றச்சாட்டு எழுப்புகிறீர்கள்’’ என ஆவேசமாக கருத்து தெரிவித்தனர்.

4 வாரம் அவகாசம்

அதே சமயம் 4 வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டிக்கும் விதமாக ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்