முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.எம் சேவையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு : மத்திய அரசு முடிவு

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  ஏடிஎம் இயந்திரங்களை பராமரிப்பது மற்றும் அவற்றில் பணம் நிரப்புவது உள்ளிட்ட சேவைத்துறைகளில் 100சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.  ஏடிஎம் இயந்திரங்களை பாதுகாப்பது, பணம் நிரப்புவது உள்ளிட்ட பணிகளுக்கு தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றில் சர்வதேச நிறுவனங்களையும் ஈடுபடுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 100சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டு யோசனை நிதியமைச்சகத்தின் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்பேரிலேயே, இந்த 100சதவீதம்  அந்நிய நேரடி முதலீட்டு யோசனையை நிதியமைச்சகம் முன்வைத்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகத்திடம் பாதுகாப்பு தணிக்கைச் சான்றிதழ் கோரப்பட்டுள்ளதாகவும், உள்துறை அமைச்சகம் அனுமதி தரும்பட்சத்தில், மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கும் எனவும் கூறப்படுகிறது.ஏற்கனவே, ஏடிஎம் பணம் நிரப்பும் சேவையில், எஸ்ஐஎஸ், சிஎம்எஸ், செக்யூர் வேல்யூ, லாஜிகேஷ் உள்ளிட்ட சில நிறுவனங்களே ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்