முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 16 பயனாளிகளுக்கு ரூ.5.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      நாமக்கல்
Image Unavailable

 நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (24.04.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.

முதியோர் உதவித்தொகை

இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், புதிய குடும்ப அட்;டைகள் வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 352 மனுக்கள் வரப்பெற்றன.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.3,355 வீதம் ரூ.36,905 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் மரணமடைந்த 5 நபர்களின் குடும்பத்தாருக்கு நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் சார்பில் தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.5.00 இலட்சம் சாலை விபத்து நிவாரண நிதியுதவிக்கான காசோலைகளையும் என மொத்தம் 16பயனாளிகளுக்கு ரூ.5,36,905 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.

அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், உதவி ஆணையர் (கலால்) புகழேந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் டி.கே.ராஜேஸ்வரி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்