முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 38 இந்தியர்கள் சிக்கினர்!

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

லண்டன்  -  பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்தும் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் குறித்து அந்நாட்டின் குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். லெய்செஸ்டரில் 2 ஆடை தொழிற்சாலைகளில் இந்த சோதனை நடைபெற்றது இச்சோதனையில்தான் 9 பெண்கள் உட்பட 38 இந்தியர்கள் சிக்கினர். இதில் 31 பேர்தான் விசா காலம் முடிவடைந்தும் பிரிட்டனிலேயே தங்கியவர்கள் என்றும் 7 பேர் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்கள் எனவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இந்த இரு நிறுவனங்களும் சட்டவிரோதமாக பயன்படுத்திய ஒவ்வொரு தொழிலாளருக்கும் 20,000 பவுண்டுகள் அபராதம் கட்ட வேண்டிய நிலை உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்