முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவில் மக்ரோன் முன்னிலை

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

பாரீஸ்  - பிரான்ஸ் அதிபர் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் என் மார்சே அணியின் எம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் இருக்கிறார். மக்ரோனுக்கு அடுத்த படியாக அதிக வாக்குகள் பெற்று தேசிய முன்னணி கட்சியின் மெரைன் லி பென் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.  பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹொலாந்தே பதவி காலம் முடிவடைந்த நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்தது. ஞாயிற்றுக்கிழமை நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 97% சதவித ஓட்டுகள் பதிவாகின. இதில் எம்மானுவேல் மக்ரோனுக்கு 23.9% சதவித வாக்குகள் கிடைத்தன. இவருக்கு அடுத்தபடியாக மெரைன் லி பென்னுக்கு 21.4% வாக்குகள் கிடைத்து.

அதிபரை தீர்மானிக்கும், 50சதவீதம் வாக்குகள் யாருக்கும் கிடைக்காததால், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவில் அதிக வாக்குகள் பெற்ற எம்மானுவேல் மக்ரோனும், மெரைன் லி பென்னும் போட்டியிடுகின்றனர். இதில் அதிக வாக்குகள் பெறும் நபர் பிரான்ஸின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

பிரான்ஸின் இளம் அதிபர்
மே 7-ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் எம்மானுவேல் மக்ரோன் (39) வெற்றி பெற்றால், பிரான்ஸின் இளம் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்