முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு - காஷ்மீர் மீது மத்திய அரசுக்கு அக்கறை தேவை: மெஹபூபா முப்தி

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

ஜம்மு  - ஜம்மு - காஷ்மீர் பிரச்சினை குறித்து மத்திய அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும். நெருக்கடியான இத்தருணத்தில் பேச்சுவார்த்தைதவிர வேறு வழியில்லை என அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தி கூறியுள்ளார்.  காஷ்மீரில் ஆளும் பாஜக - பிடிபி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவருவதாக கூறப்பட்டுவரும் நிலையில் முதல்வர் மெஹபூபா முப்தி நேற்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்தார்.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்துவரும் கலவரங்களால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தி விரிவாக எடுத்துரைத்தார். அப்போது அவர், "ஜம்மு - காஷ்மீர் பிரச்சினை குறித்து மத்திய அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும். நெருக்கடியாக இத்தருணத்தில் பேச்சுவார்த்தைதவிர வேறு வழியில்லை" எனக் கூறியிருக்கிறார்.

கூட்டணியில் விரிசல்?
காஷ்மீரில் பிடிபி-பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. மாநிலத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக இருகட்சிகளுக்கும் இடையே கருத்து வேற்றுமை நிலவிவருகிறது. பாஜக அமைச்சர் சந்தர்பிரகாஷ் கங்கா, "கல்வீசு தாக்குதலில் ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு தோட்டக்களால் பதில் சொல்ல வேண்டும்" எனக் கூறியிருந்தார். இது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியது. பாஜக அமைச்சரின் கருத்தை சுட்டிக்காட்டிய பிடிபி, மாநிலத்தில் எப்போதுமே அமைதியற்ற சூழல் நீடிக்க பாஜக சதியில் ஈடுபடுவதாக கடுமையாக சாடியது.

பிடிபி தலைவர் பீர்சதா மன்சூர்
இது குறித்து பிடிபி தலைவர் பீர்சதா மன்சூர் வெளியிட்ட அறிக்கையில், "சில அரசியல்வாதிகளின் இதுமாதிரியான கருத்துகள் அருவருப்பாக இருக்கிறது. மேலும், காஷ்மீரை பிரச்சினைக்குரிய பகுதியாக வைத்திருக்க வேண்டும் என்ற சிலரது தூண்டுதலையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது" எனக் கூறியிருந்தார். இதனையடுத்து கடந்த வாரம் பிடிபி மூத்த தலைவர் ஹசீப் டிரபுவை பாஜகவின் ராம் மாதவ் சந்தித்துப் பேசினார். அதன் நீட்சியாக நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா சந்தித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்