முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள டிஜிபி நீக்கம் செல்லாது: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - கேரள முன்னாள் டிஜிபி சென்குமார் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், அவரை நீக்கியது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு  தீர்ப்பளித்துள்ளது.  இதுகுறித்துக் கூறியுள்ள நீதிமன்றம், ''சென்குமாரை நீக்கியது தன்னிச்சையானது; சட்ட விதிகளின் படி அவர் நீக்கப்படவில்லை. ஒட்டுமொத்த சூழலையும், உண்மைத் தன்மையையும் பார்க்கும்போது, மத்திய நிர்வாக தீர்ப்பாணையம் வழங்கிய தீர்ப்பு செல்லாது. சென்குமார் மீண்டும் டிஜிபி பதவியில் அமர்த்தப்பட வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளது.  நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா அமர்வு இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் புதிதாகப் பொறுப்பேற்ற லோக்நாத் பெஹரா, அவரின் டிஜிபி பொறுப்பில் இருந்து விலக்கப்பட வேண்டும்.

என்ன நடந்தது?
கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த 2-வது நாளில் டிஜிபி பதவியில் இருந்து சென்குமார் நீக்கப்பட்டு பணி மாற்றம் செய்யப்பட்டார். சட்டக் கல்லூரி தலித் மாணவர் படுகொலை வழக்கு மற்றும் புட்டிங்கல் கோயில் தீ விபத்து விவகாரங்களைக் கையாள்வதில் தோல்வி அடைந்ததால், இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்டது. மாநில அரசின் முடிவை எதிர்த்து சென்குமார் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாணையம் மற்றும் கேரள உயர் நீதிமன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பளித்தன. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சென்குமார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சென்குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவேவும், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும் ஆஜராகி வாதாடினர். அப்போது அரசியல் உள்நோக்கத்துக்காகவே தான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக சென்குமார் நீதிபதியிடம் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு  நேற்று சென்குமார் மீண்டும் டிஜிபி பதவியில் அமர்த்தப்படவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago