முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒழித்துக்கட்டி விடுவோம்: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

சியோல், கொரியா தீபகற்ப பகுதியில் அமெரிக்கா போர் தொடுத்தால் ஒழித்துக்கட்டிவிடுவோம் என்று வடகொரியா கடுமையாக எச்சரித்துள்ளது. இதனால் கொரியா தீபகற்ப பகுதியில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது.

ஐ.நா.வையும் மீறி வடகொரியா ஏவுகணைகளையும் அணுஆயுதங்களையும் தயாரித்து குவித்து வருகிறது. அதோடுமட்டுமல்லாது அண்டை நாடான தென்கொரியாவையும் கபலீகரம் செய்ய வடகொரியா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு சீனா அனைத்து உதவிகளையும் மறைமுகமாக செய்து வருகிறது.

வடகொரியா இதுவரை 6-க்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகளை செய்திருப்பதாகவும் மேலும் சோதனையில் ஈடுபட தயாராகி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதனையொட்டி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வடகொரியா விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அமெரிக்காவின் அணு ஆயுத போர்க்கப்பல் கொரியா தீபகற்ப பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. வடகொரியா மீது எந்த நேரமும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று தெரிகிறது.

இதனையொட்டி அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியா மாதிரி எங்களை நினைத்துவிட வேண்டாம். எங்கள் மீது போர்தொடுத்தால் ஒழித்துக்கட்டி விடுவோம் என்று அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க போர்க்கப்பல் கொரியா தீபகற்பகத்திற்கு வந்துள்ளது குறித்து குறிப்பிட்ட வடகொரியா ஒரே ஏவுகணையால் அமெரிக்க கப்பலை மூழ்கடித்தவிடுவோம் என்று எச்சரித்தது. தறப்போது அமெரிக்காவையையே ஒழித்துவிடுவொம் என்று வடகொரிய எச்சரித்திருப்பது கொரியா தீபகற்ப பகுதியில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது. வடகொரியா அணு ஆயுதம் தயாரித்திருந்தாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணையை அந்த நாடு இன்னும் தயாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும் தற்போது 2 அணுஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.

வடகொரியாவின் இந்த எச்சரிக்கை அந்தநாட்டின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போர் அச்சுறுத்தல் செல்லிமீன் மாதிரி ஆச்சரியப்படுத்தலாம். ஆனால் வடகொரியா விஷயத்தில் அது எடுபடாது என்றும் அந்த வெப்சைட்டில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் வடகொரியா விஷயத்தில் அமெரிக்கா கொஞ்சம் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும்படி சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இது சாத்தான் வேதம் ஓதுகிறமாதிரியாகும். பிள்ளையை கிள்ளிவிட்டும் தொட்டியை ஆட்டியும் வரும் பழக்கம் சீனாவுக்கு கைதேர்ந்த கலையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago