முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்  -  ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சித்தலைவர் அப்துல் கானி தாரை ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். காஷ்மீரின் தெற்கே புல்வாமா பகுதியின் அருகில் உள்ள பிங்க்லான் என்ற இடத்தில் இக்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரின் பெயர் அப்துல் கானி தார்.

ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது அவரை ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் வழிமறித்து துப்பாக்கியால் சாராமரியாகச் சுட்டனர். இதில் மார்பில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் படுகாயம் அடைந்த கானி தார் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago