முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.  அதனைத் தொடர்ந்து, பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து  மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பாம்பு கடித்து இறந்த பரமக்குடி வட்டம், பாண்டியூர் கிராமத்தைச் சார்ந்த ஜெயலெட்சுமி என்பவரது கணவர் பழனி என்பவருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவித்தொகையாக ரூ.50ஆயிரத்திற்கான  காசோலையினையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழும் கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ள போகலூர் ஊராட்சி ஒன்றியம், காமன்கோட்டை ஊராட்சிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை ஊராட்சியின் துணை  வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகலைச்செல்வன் - இடத்திலும்; வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகானந்தம்,  சமூக பாதுகாப்பு தனித்துணை திட்ட ஆட்சியர் எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியன்  உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்