முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

19-வது ஆசிய ஸ்குவாஷ் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

சென்னை  - இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் சார்பில் 19-வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் இன்றுமுதல் 30-ம் தேதி வரை நடக்கிறது.

12 நாடுகள்
இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் சார்பில் 19-வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் இன்று முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, ஹாங்காங், மலேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், சிங்கப்பூர் உள்பட 12 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

7 ஆண்டுகளுக்கு பிறகு ...
7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி சென்னையில் நடைபெறுகிறது. சேத்துப்பட்டில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமி மற்றும் ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் போட்டி நடத்தப்படுகிறது.  இந்தியா சார்பில் தீபிகா பலிக்கல், ஜோஸ்னா சின்னப்பா, ஜூனைனா குருவில்லா ஆகிய வீராங்கனைகளும், ஹரிந்தர் பால் சந்து, வேலவன் செந்தில்குமார் ஆகிய வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள். இந்த தகவலை போட்டி அமைப்பு குழு சேர்மன் தேபேந்திரநாத் சாரங்கி, இயக்குனர் சைரஸ் போஞ்சா ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தனர். அப்போது ‘பாகிஸ்தான் வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்பதில் விசா பிரச்சினை எழுந்து இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளதே? என்று கேட்டதற்கு ‘இதுவரை அப்படி எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை என்று பதிலளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago