முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 28-வது லீக் ஆட்டம்: மும்பை அணியை 3 ரன்களில் வீழ்த்தி புனே ஹாட்ரிக் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை  - ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

160 ரன்கள்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 28-வது ஆட்டம், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், உள்ளூர் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை எதிர்கொண்டது. டாஸ்வென்ற மும்பை அணி, புனே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. பின்னர் விளையாடிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் ராகுல் திரிபாதி 45(31), அஜய் ரகானே 38(32) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் மனோஜ் திவாரி 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

4-வது வெற்றி
இதனையடுத்து 161 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை அணி விளையாடியது. ஆனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். புனே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி தனது 4-வது வெற்றியை பதிவு செய்தது. அதேபோல் மும்பை அணி தனது இரண்டாவது தோல்வியை சந்தித்தது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற புனே அணி பின்னர் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து தற்போது ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது.அற்புதமாக பந்து வீசிய பென்ஸ் ஸ்டோக் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதில் ஒரு ஓவர் மெயிடன் ஆகும். அவர்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்