முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா இணைய தளத்தில் நேரடியாக பதிவு செய்யும் வசதி : கலெக்டர் டாக்டர் பழனிசாமி தகவல்

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      திருச்சி

திருச்சி மாவட்டத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்புத் துறையின் இணைய தளத்தில் பயனாளிகள் நேரடியாக பதிவு செய்யும் வசதி; ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.

 இணையதள வசதி

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயன்பெறக் கூடிய பயனாளிகளைக் கண்டறிந்து இத்திட்டத்தின் கீழ் விட்டுவசதி ஏற்படுத்தித் தருவதாகக் கூறி தனிநபர்கள், நிறுவனங்கள், தகவல்கள் மற்றும் பணம் திரட்டுவதாக மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற ஏதுவாக தனிநபரையோ அல்லது நிறுவனத்தையோ மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், இத்திட்டம் தொடர்பாக அனுமதியற்ற வகையில் பெயரையோ, சின்னத்தையோ பயன்படுத்துவோர் தண்டனைக்குரிய நடவடிக்கைக்கு உள்ளாவர்.

இத்திட்டத்தின் கீழ் தேவைக் கணக்கெடுப்பை இலவசமாக நடத்த நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் பணிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையின் இணைய தளத்தில் இத்திட்டத்தால் பயன் பெறக் கூடிய பயனாளிகள் நேரடியாக பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநில அரசு, யூனியன் பிரதேசங்களில் பொது சேவை மையத்தில், மிகக் குறைந்த பதிவுக் கட்டணமாக ரூபாய் 25 மற்றும் சேவைக் கட்டணம் செலுத்தி இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்ய மத்திய அரசின் அனுமதி பெற்ற நபர்கள் என கூறிக் கொண்டு, தகவல்கள் மற்றும் பணம் திரட்டும் எந்த தனிநபர், நிறுவனத்தையும் பொது மக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்