முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் குரு மருத்துவமனை ஆண்டுவிழா அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து கொண்டார்

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் பிரபல குரு மருத்துவமனை ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவில், அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து கொண்டார்.

     மதுரையை தலைமையிடமாக கொண்டு புற்றுநோய் மருத்துவம் மற்றும் குழந்தையின்மை நோய் மருத்துவத்தில் தலைசிறந்து விளங்கி வரும் குரு மருத்துவமனை-அனீஷ் செயற்கை கருத்தரிப்பு மையம் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நலன்கருதி புதிய கிளை மருத்துவமனையை ராமநாதபுரத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இதன்படி இந்த மருத்துவமனையின் முதலாம் ஆண்டுவிழா மற்றும் இந்த மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு பாராட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குரு மருத்துவமனையின் நிறுவனத்தலைவரும் பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர்.எஸ்.ஜி.பாலமுருகன் தலைமை வகித்தார். டாக்டர்கள் திருமலைவேலு, கமலாராகுல் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். குரு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் பிரபல செயற்கை கருத்தரிப்பு மைய சிகிச்சை நிபுணருமான டாக்டர் கல்பான வரவேற்று பேசினார். விழாவில், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குரு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

      ராமநாதபுரத்தை சேர்ந்த 40வயது பெண்ணிற்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாததால் ராமநாதபுரம் குரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செயற்கை முறையில் கருத்தரித்து இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டத்திலேயே செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல் முறை. விழாவில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல டாக்டர்கள், முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். முதலாம் ஆண்டுவிழாவையொட்டி வரும் மே 15-ந் தேதி வரை இந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளுக்கும் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுவதாக மருத்துவமனை நிறுவனத்தலைவர் பாலமுருகன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்