முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறட்சியால் மடிந்து கொண்டிருக்கும் ஏமனுக்கு உதவுங்கள்: ஐ.நா. பொதுச்செயலாளர்

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

ஜெனிவா, வறட்சியாலும் உள்நாட்டு போராலும் மடிந்துகொண்டியிருக்கும் ஏமன் நாட்டுக்கு உதவுங்கள் என்று உலக நாடுகளை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை செயலாளர் அந்தோணியா கட்டரஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஏமனும் ஒன்று. பாலைவனம் அதிக பகுதிகளை கொண்டதாக இருந்தாலும் எண்ணெய் வளம் உள்ள நாடு. இருந்தபோதிலும் அந்த நாடு உள்நாட்டுப்போர் மற்றும் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே அதிக அளவு குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்து வருகிறார்கள் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் கட்டர்ஸ் கவலையுடன் கூறியுள்ளார்.

உதவி அளிக்க உறுதி செய்யும் மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் நடந்தது. இதில் உதவு செய்யும் நாடுகளில்  இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டிற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பொதுச்செயலாளர் அந்தோணியா கட்டர்ஸ் தலைமை தாங்கி உருக்கமாக பேசினார். அப்போது அவர் கூறுகையில் உலகத்திலேயே வறட்சியாலும் உள்நாட்டு போராலும் ஏமன் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்கள் கிடைக்காமல் உலகத்திலேயே அதிக அளவுக்கு ஏமன் நாட்டில் குழந்தைகள் உயிரிழந்து வருகிறார்கள் என்றார். உதவி செய்யும் நாடுகள் உடனடியாக உதவிக்கரம் நீ்ட்டினால் பெரும் பாதிப்பில் இருந்து ஏமன் காக்கப்படும். குழந்தைகள் உயிரிழைப்பையும் தடுத்து நிறுத்தலாம். ஏமனுக்கு நடப்பாண்டில் மட்டும் 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி தேவையாக இருக்கிறது.  உதவி செய்யும் நாடுகள் உதவி செய்யாவிட்டால் ஏமன் நாடு கடும் பஞ்சத்திற்கும் வறட்சிக்கும் ஆளாகிவிடும். இன்றளவுக்க மொத்த தேவையில் வெறும் 15 சதவீத நிதியுதவி மட்டும் அளிக்கப்பட்டுள்ளது என்றும்  5 வயதுக்குட்டசிறுவர் சிறுமிகளில் 10 நிமிடத்திற்கு ஒருவர் வீதம் காரணம் தெரியாமல் இறந்துகொண்டியிருக்கிறார்கள் என்றும் கட்டரஸ் கூறினார்.

மீதமுள்ள சிறுவர், சிறுமிகள் சுகாதார வசதி இல்லாமலும் பட்டினியாலும் வாடிக்கொண்டியிருக்கிறார்கள். இந்த மாநாடு நடக்கும் நேரத்திற்குள் ஏமனில் 50 குழந்தைகள் உயிரிழந்துவிடுவார்கள். நாம் உதவி செய்தால் இறப்பை தடுத்து நிறுத்த முடியும் என்றார்.

ஏமன் நாடானது தற்போது மனிதாபிமான உதவிக்கான நெருக்கடியில் இருக்கிறது. ஏமன் நாட்டில் உள்ள ஒரு கோடியே 70 லட்சம் பேரில் 60 சதவீதம் பேர் பட்டினியால் வாடிக்கொண்டியிருக்கிறார்கள். 70 லட்சம் பேர் அடுத்த நேரத்திற்கு எங்கிருந்து உணவு வரும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டியிருக்கிறார்கள். அதனால் அந்தநாட்டுக்கு உடனடியாக உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என்று ஐ.நா.மனிதாபிமான  உதவிப்பிரிவு தலைவர் ஸ்டீபன் பேசுகையில் வருத்தத்துடன் கூறினார்.

 சுவீஸ்டர்லாந்து நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கட்  வால்ஸ்ட்ரோம் பேசுகையில் ஏமன் நாட்டில் 20 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது தடைபட்டுள்ளது. ஏமன் நாட்டு ராணுவத்திற்கு ஆள் எடுப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளில் பெரும்பாலானவர்கள் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர். இதைத்தடுக்க நாம் உடனடியாக ஏமன் நாட்டுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

ஏமனில் அரசு ஆதரவு படைகளுக்கும் ஈரான் நாட்டு ஆதரவு குதி மற்றும் அதன் கூட்டணி படைகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. அரசு ஆதரவு படைகளுக்கு சவூதி அரேபியா ஆதரவு கொடுத்து வருகிறது. அரசுக்கு எதிரான படைகள் முன்னாள் அதிபருக்கு ஆதரவாக போரிட்டு வருகின்றன. இந்த மாநாட்டிற்கு சுவீட்சர்லாந்தும் சுவீடனும் கூட்டாக சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago