முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவத்துக்கு செலவிடுவதில் இந்தியாவுக்கு 5-வது இடம்

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

ஸ்டாக்ஹோம் - உலகிலேயே ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு இன்ஸ்டிடியூட் (சிப்ரி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2016-ல் இந்தியாவின் ராணுவ செலவினம் 8.5 சதவீத மாக அதிகரித்தது. ராணுவத்தை மேம்படுத்த 55.9 பில்லியன் அமெரிக்க டாலரை செலவிட்டுள்ளது. இதன்மூலம் ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடு களின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா 2015 மற்றும் 2016-ம் காலக்கட்டத்தில் 1.7 சதவீதம் வரை ராணுவ செலவினத்தை அதிகரித்து 611 பில்லியன் டாலரை செலவிட்டுள்ளது.

சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் முதல் 15 இடங்களில் இடம்பிடித்துள்ளன. இதில். 2-வது இடத்தில் உள்ள சீனாவின் ராணுவ செலவினம் 215 பில்லியன் டாலர். இது கடந்த காலங்களை விட 5.4 சதவீதம் அதிகம். ரஷ்யா தனது ராணுவத்தை பலப்படுத்து வதற்காக 5.9 சதவீதம் வரை செலவினத்தை அதிகரித்துள்ளது. அந்நாடு மொத்தமாக 69.2 பில்லியன் டாலரை செலவிட்டு 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2015-ல் 3-வது இடத்தில் இருந்த சவுதி அரேபியா தனது ராணுவ செலவினத்தை 30 சதவீதம் வரை குறைத்துக் கொண்டதால்

4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
முதல் 15 இடங்களில் பாகிஸ்தான் இடம்பெறவில்லை. எனினும் அந்நாடு 9.93 பில்லியன் டாலர் வரை ராணுவத்துக்காக செலவிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் ராணுவ செலவினம் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. தென்சீன கடலில் சீனா உள்ளிட்ட நாடுகள் உரிமை கொண்டாடி வருவதால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஆசிய பிராந்தியத்தில் ராணுவ செலவினம் 4.6 சதவீதம் வரை கடந்த ஆண்டு அதிகரித்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்