முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவேயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 CRPF வீரர்களின் உடலுக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் அஞ்சலி செலுத்தினார்

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      திருச்சி
Image Unavailable

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவேயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 CRPF வீரர்களின் உடலுக்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் , மாவட்ட ஆட்சித்தலைவர்கள் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி(திருச்சி), லெ.நிர்மல்ராஜ்,இ.ஆ.ப.,(திருவாரூர்), திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

மலர்வளையம்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள காலாபத்தர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த (CRPF) வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் தமிழகத்தைச்சேர்ந்த 4 CRPF வீரர்கள் உட்பட 25 CRPF வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு எடுத்தவரப்பட்ட மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர்கள் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காமராஜர் காலனியைச் சேர்ந்த செந்தில்குமார் தஃபெ நாராயணன், வலைங்கைமான் அருகே உள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பத்மநாதன் தஃபெ.முருகேசன், சேலம் மாவட்டம் கெங்கவல்லி நல்லூர் திட்டச்சேரி கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் தஃபெ நல்லுசாமி ஆகியோரின் உடல்கள் சிறப்பு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. மூன்று வீரர்களின் உடலுக்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் , மாவட்ட ஆட்சித்தலைவர்கள் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி(திருச்சி), லெ.நிர்மல்ராஜ்(திருவாரூர்), திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் துணையுடன் அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்களுடன் உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பின்னர் உணவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடன் தெரிவித்ததாவது: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 25 வீரர்கள் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 1 வீரர் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 1 வீரர் உள்ளிட்டவர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்களின் உடல்களுக்கு இன்று (25.04.2017) திருச்சி விமானநிலையத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களின் குடும்பங்களுக்கு கருணைத்தொகையாக தலா ரூபாய் 20 இலட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். உயிரிழந்த வீரர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று இன்றே இத்தொகை வழங்கப்படுகிறது. மேலும் உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம். இவ்வாறு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் கணேஷ்குமார் (திருச்சி), செல்வன் (ஆத்தூர் - சேலம்), செல்வசுரபி (மன்னார்குடி), முத்துமீனாட்சி (திருவாரூர்), வட்டாட்சியர்கள் பாத்திமா சகாயராஜ் (திருச்சி மேற்கு), சத்தியமூர்த்தி (திருச்சி கிழக்கு) மற்றும் மத்திய ரிசர்வ் படை காவல் படையினர், விமான நிலைய உயர் அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்