முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா மூன்றே குண்டுகளில் உலகை அழித்துவிடும் : அல்ஜென்ரோ பெனோஸ் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

ஸ்பெயின்  - மூன்று குண்டுகளில் உலகையே வடகொரியா அழித்துவிடும் என்று அந்நாட்டின் சிறப்பு தூதர் என அழைக்கப்படும் அல்ஜென்ரோ பெனோஸ் கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  ஸ்பெயினைச் சேர்ந்த அல்ஜென்ரோ பெனோஸ் என்ற சமூக ஆர்வலர் வடகொரியாவுக்காக மேற்கத்திய நாடுகளுடன் கலாச்சார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உறவு வைத்திருக்கும் சிறப்பு தூதராக அறியப்படுகிறார்.

இந்த நிலையில் அர்ஜெண்டினா நாட்டின் தொலைகாட்சிக்கு கொரிய தீபகற்ப பகுதியில் நிலவும் போர் பதற்றம் குறித்து அல்ஜென்ரோ பெனோஸ் பேசும்போது, "வடகொரியாவை யாரும் நெருங்க முடியாது. அவ்வாறு நெருங்க முயன்றால் துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தன்னை வடகொரியா பாதுகாத்துக் கொள்ளும். வடகொரியாவால் மூன்றே குண்டுகளில் உலகையே அழித்துவிட முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

அதிபர் மிரட்டல்
வடகொரியாவின் தொடர் அணு ஆயுத ஏவுகணை சோதனைகள் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் போர்க்கப்பல் கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டுள்ளது. 'அந்த கப்பலை ஏவுகணை வீசி மூழ்கடிப்போம், எங்கள் மீது போர் தொடுத்தால் அணுஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம்' என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago