முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய ரிசர்வ் படைவீரர் அழகுபாண்டியின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20லட்சம் நிவாரண நிதி

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

   திருமங்கலம்.-சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுதீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படைவீரர் அழகுபாண்டியின்  குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20லட்சம் நிவாரண நிதியை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.

மத்திய ரிசர்வ் படைவீரர் வீரமரணம்;:

திருமங்கலத்தை அடுத்த பேரையூர் அருகேயுள்ள முத்துநாகையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் பிச்சையழகு-ராக்கம்மாள் தம்பதியரின் மூத்த மகனான அழகுபாண்டி(29)என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படையில் வீரராக பணியாற்றிவந்தார். சம்பவத்தன்று  சுக்மா மாவட்டத்திலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சாலையமைக்கும் பணிகளுக்கு 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் படைவீரர்கள் காவல் புரிந்து வந்துள்ளனர்.அப்போது படைவீரர்களின் கண்களில் படாமல் 300க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஒன்றாக திரண்டுள்ளனர்.பின்னர் துப்பாக்கிகளால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் மத்திய ரிசர்வ் படைவீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் பங்கர தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் தமிழக வீரர்கள் 3பேர் உட்பட 26 போலீசார் பலியாகினர்.இந்த சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருமங்கலத்தை அடுத்த பேரையூர் அருகேயுள்ள முத்துநாகையாபுரத்தைச் சேர்ந்த வீரர் அழகுபாண்டி(29) வீரமரணமடைந்தார்.திருமணமாகாத இவருக்கு  தற்போது ராணுவத்திற்கு தேர்வாகியுள்ள பவித்தாரன் என்ற தம்பியும்,சத்யா,நித்யா என்ற திருமணமான இரு தங்கைகளும் உள்ளனர்.

ரூ.20லட்சம் நிவாரணநிதி அறிவிப்பு:

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் திருமங்கலம் அருகேயுள்ள முத்துநாகையாபுரத்தைச்  சேர்ந்த வீரர் அழகுபாண்டி வீரமரணமடைந்ததை தொடர்ந்து முத்துநாகையாபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.மேலும் அழகுபாண்டியின் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்படும் வரையில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்,கூட்டமாக திரண்டிருந்த கிராமமக்கள் கதறியழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைப்பதாக இருந்தது. இந்நிலையில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர் அழகுபாண்டியின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்;பில் நிவாரண நிதியாக ரூ.20லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி அறிவித்தார்.அதனிடையே பலியான படைவீரரின் உடல் வருவதற்கு முன்னதாக தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் முத்துநாகையாபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று வீரமரணமடைந்த அழகுபாண்டியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

விமானம் மூலம் உடல் மதுரை வருகை:

இந்நிலையில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் பலியான தமிழக வீரர் அழகுபாண்டியின் உடல் விமானம் மூலம் நேற்று மாலை தனிவிமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ராணுவீரர்கள் அணிவகுப்புடன் பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்பட்ட வீரர் அழகுபாண்டியின் உடலுக்கு மதுரை விமானநிலையம் முன்பாக மரியாதை செலுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;, மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ்,மாவட்ட எஸ்.பி.,விஜயேந்திரபிதாரி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து வணங்கி மரியாதை செலுத்தினார்கள். இதையடுத்து தமிழக வீரர் அழகுபாண்டியின் உடல் அவரது சொந்த ஊரான முத்துநாகையாபுரம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

நிவாரணநிதி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்:

இந்நிலையில் முத்துநாகையாபுரம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட தமிழகவீரர் அழகுபாண்டியின் உடலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் அழகுபாண்டியின் பெற்றோர் பிச்சையழகு-ராக்கம்மாள் ஆகியோரிடம்  தமிழக அரசின் சார்பில் நிவாரணநிதியாக ரூ.20லட்சத்திற்காக காசோலையை அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் வழங்கினார்.பின்னர் நாட்டிற்காக வீரமரணடைந்த தனது மகனின் நினைவான கதறியழுத அழகுபாண்டியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆறுதல் கூறினார்.

அஞ்சலி நிகழ்சிகளில் கலந்து கொண்டோர்:

மதுரை கலெக்டர் கொ.வீரராகவராவ்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரி, மாவட்ட கழக துணை செயலாளர் பி.அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி செயலாளர்கள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி, திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை தலைவர்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,சேடபட்டி ஒன்றிய செயலாளர் பிச்சைராஜன்,திருமங்கலம் ஒன்றிய துணை செயலாளர் சுகுமார்,உசியம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா,பேரையூர் தாசில்தார் உதயசங்கர் மற்றும் அதிகாரிகள் அப்போது உடனிருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்