முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்  நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

465 மனுக்கள்

இக்கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் அடையாள அட்டை ஆகியன கோரி 465 மனுக்கள் வரப்பெற்றன.  அவை அனைத்தையும் கலெக்டர்  பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

மனுக்கள் மீது நடவடிக்கை

இக்கூட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற மனுக்கள், குறைகேட்பு நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள்,  அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள், அம்மா அழைப்பு மைய கோரிக்கைகள் ஆகியவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவைக்கான காரணம் ஆகியன குறித்து கலெக்டர்  ஆய்வு செய்தார்.  பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.   முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம், சு.குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன்கள் அரிகிருஷ்ணன், குற்றாலீஸ்வரன் ஆகியவர்கள் ஏரியில் மூழ்கி இறந்தது தொடர்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ராஜா என்பவருக்கு ரூ.1 லட்த்திற்கான காசோலையும், 2015-16ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் மாநில அளவில் முதலிடம் பெற்ற ஜான்சன் சிவாவிற்கு ரூ.25,000க்கான காசோலையும்,  தமிழக முதலமைச்சரின் பாராட்டுச் சான்றிதழும், இராண்டாமிடம் பெற்ற சுதாகர் மற்றும் போதிபிரசாந்த் ஆகியவர்களுக்கு தலா ரூ.20,000 க்கான காசோலையும்,  தமிழக முதலமைச்சரின் பாராட்டுச் சான்றிதழும், மூன்றாமிடம் பெற்ற பிரியங்காவிற்கு ரூ.15,000க்கான காசோலையும்,  தமிழக முதலமைச்சரின் பாராட்டுச் சான்றிதழும்,இடது கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட விழுப்புரம் டவுன், முத்துவேல்-லே-அவுட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கு ஓய்வூதியருக்கான தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.15,000 க்கான காசோலையும் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  வழங்கினார்.

 பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) பத்ரிநாத், மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அனந்தராம், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்