முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க படைகளை முற்றிலும் அழிப்போம் : வடகொரியா சபதம்

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

சியோல்  - கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் எழுந்துள்ள நிலையில் அமெரிக்க படைகளை முற்றிலும் அழிப்போம் என வடகொரியா சபதமிட்டு உள்ளது.

கார்ல் வின்சன்
வடகொரியா மீண்டும் அணுஆயுத அல்லது ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதை தவிர்க்கும் விதமாக அமெரிக்கா யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி உள்ளது. ஏவுகணைகள் தாங்கிய அமெரிக்காவின் யுஎஸ்எஸ் மிசிகான் நீர்மூழ்கி இணைகிறது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா படைகளை விஸ்தரிப்பதால் பதற்றமானது அதிகரித்து உள்ளது. அமெரிக்கா மற்றும் வடகொரியா கடந்த சில வாரங்களாக கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டு உள்ளதால் பதற்றமானது அதிகரித்து உள்ளது.

டிரம்ப் கோரிக்கை
இதற்கிடையே எதிர்பாராத விதமாக வடகொரியா தொடர்பாக பேசுவதற்கு இன்று அனைத்து செனட் உறுப்பினர்களும் வெள்ளை மாளிகைக்கு வரவேண்டும் என டொனால்டு டிரம்ப் கோரிக்கை விடுத்து உள்ளார். பாதுகாப்பு அரணாக அமைந்து உள்ளநிலையிலும் அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார் என வடகொரியா மிரட்டல் விடுத்தது. எந்தஒரு நேரத்திலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையை தொடங்க வடகொரியா தயாராக உள்ளது என தென் கொரியா தெரிவித்தது.

அணு ஆயுத சோதனை
வடகொரியா மேலும் ஒரு அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருகிறது, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதை அமெரிக்காவின் செயற்கைகோள் காண்பித்து உள்ளது. வடகொரியா நகர்வை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் அமெரிக்க படைகளை முற்றிலும் அழிப்போம் என வடகொரியா சபதமிட்டு உள்ளது. அணு ஆயுத போர் வெடிக்கும் என்றால் அனைத்து எதிரிகள் படையையும் அழிக்கப்படும் என வடகொரியா சபதமிட்டு உள்ளது.

 உயிர்பிழைக்க மாட்டார்கள்
வடகொரியா அரசு பத்திரிக்கையான மின்ஜூஜோசான், “எதிரிகள் மீது இரக்கமற்ற அழிவுத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் என வடகொரிய ராணுவம் ஏற்கனவே அறிவித்துவிட்டது, அவர்கள் பொறுப்பற்ற முறையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள், உயிர்பிழைக்க மாட்டார்கள்,” என கூறிஉள்ளது.அமெரிக்காவால் கற்பனை செய்யமுடியாத ஜூஷி ஆயுதங்களால் அமெரிக்க படைகளை எங்கள் படைகளால் அழிக்க முடியும், ஒருத்தர் கூட மிஞ்சமாட்டார்கள் என குறிப்பிட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்