சிதம்பரம் கிளை நூலகத்தில் உலக புத்தக தினவிழா: கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      கடலூர்
chithamparam world book day 2017 04 25

தமிழக அரசின் சார்பில் உலக புத்தக தினத்தினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23 ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நூலக கண்காட்சியினை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

 புரவலர்களுக்கு பாராட்டு

 சிதம்பரம் கிளை நூலகத்தில் நடைபெற்ற உலக புத்தக தின விழா நிகழ்ச்சிக்கு கிளை நூலகர் பி.ரகுநந்தன் வரவேற்புரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் ரெங்கசாமி, முகமது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு நூலக கண்காட்சியினை துவக்கி வைத்து பார்வையிட்டு புதிய நூலக புரவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

பலர் பங்கேற்பு

நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய கழக அவைத் தலைவர்கள் கோவி.ராசாங்கம், சுந்தரமூர்த்தி, மு.மாவட்ட கவுன்சிலர் கர்னா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், ஊராட்சி செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் கனேஷ், மாரிமுத்து, கோதண்டம், வேல்முருகன், நூலகர்கள் கனேஷ், அருள், சிவகுமார் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நூலகர் கனேஷ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: