முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் பணிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

 

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா. சவான் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் பணிகளை, நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார

ஆய்வு

 வடசேரி, உழவர்சந்தையில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணை விற்பனை மையத்தின் மூலம், விற்பனை செய்யப்படும் தோட்டக்கலை செடிகளையும், குளிர்பதன சேமிப்பு அறை, கழிவுகள் மூலம் உரமாக்கும் இடம் ஆகியவற்றினை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர், வடசேரி அருகில் உள்ள கிருஷ்ணன்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள நெல் கிட்டங்கி மற்றும் பரிமாற்றக்கூடம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, விளைபொருள்களின் தரம் கண்டறிந்து, சான்று வழங்கும், அக்மார்க் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் உணவுபொருட்களில் கலப்பட பரிசோதனை பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், தோவாளை வட்டாரம், ஊரக்கோணத்தில் அமைக்கப்பட்டுள்ள நறுமண வளாகத்தில் சேமிப்புக்கிடங்கு, உலர்களங்கள் மற்றும் கிராம்பு எண்ணெய் எடுக்கும் பணியினை ஆய்வு செய்தார்.பின்னர், தோவாளையில் அமைக்கப்படும் மலர் வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, அதனை விரைவில் முடிக்குமாறு, அறிவுரைகளை வழங்கினார்.

பலர் பங்கேற்பு

 இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எம்.நிஜாமுதீன், துணை இயக்குநர் (வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை) சுரேஷ் ஜோஸ், கன்னியாகுமரி விற்பனைக்குழு செயலர் ஜாண் விஜுபிரகாஷ், வேளாண்மை அலுவலர்கள் சுனில்தத், உழவர்சந்தை நிர்வாக அலுவலர் எஸ். மனோ ரஞ்சிதம், வேளாண் அலுவலர் விமலா, உதவிப்பொறியாளர் ரமேஷ், கிராம்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்