முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று ஆதார் பதிவு

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      தேனி
Image Unavailable

 போடி,-     போடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று ஆதார் பதிவு செய்யும் பணி பொது சேவை மையம் சார்பில் நடைபெற்றது.
  நாடு முழுவதும் பல்வேறு அரசு சலுகைகள் பெறவும், தனியார் சேவைகள் பெறவும் ஆதார் எண் தேவைப்படுகிறது. இதற்காக மத்திய அரசு சார்பில் ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு ஆதார் பதிவு முகாம்கள் அமைக்கப்பட்டன. தற்போது இந்த முகாம்கள் குறைக்கப்பட்டு நிரந்தர பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  இதேபோல் தனியார் மூலம் பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டு இந்த மையங்களிலும் ஆதார் பதிவு, ஆதார் திருத்தம், குழந்தைகளுக்கான ஆதார் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் சில மாற்றுத்திறனாளிகள், மன வளர்ச்சி குன்றியோர் ஆதார் எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
  இவர்களுக்கு பொது சேவை மையங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று ஆதார் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த எஸ்.ஆர்.எஸ். கம்ப்யூட்டர் சென்டர் பொது சேவை மையம் சார்பில் போடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதார் பதிவு செய்யும் பணி நடைபெற்றது. இதில் போடி கருப்பசாமி கோவில் தெருவில் மாற்றுத்திறனாளியும், மனவளர்ச்சி குன்றியவருமான ஒருவருக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டது.
   மனவளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நிரந்தர பதிவு முகாமிற்கு செல்ல முடியாத சூழ்நிலையில் வீடுகளுக்கே சென்று ஆதார் பதிவு செய்யப்பட்டதால் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர். ஆதார் பதிவு ஏற்பாடுகளை பொது சேவை மைய அமைப்பாளர் ராஜா மாரிமுத்து செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்