முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடியாலம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் 68 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்:கலெக்டர் டாக்டர் பழனிசாமி வழங்கினார்

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      திருச்சி

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் கொடியாலம் கிராமம் புலிவலம் ஸ்ரீ மாதர் பாண்டியம்மன் கோவில் திடலில் நேற்று(26.04.2017) நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. 1187 பயனாளிகளுக்கு ரூபாய் 68 இலட்சத்து 59 ஆயிரத்து 637 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 உதவித்தொகை

 இம்முகாமில் முதிர்கன்னி உதவித்தொகை, நலிந்தோர் நலத்திட்ட உதவிகள், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதலமைச்சர் அவர்களின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 333 நபர்களுக்கு ரூபாய் 17 இலட்சத்து ஆயிரத்து 350 மதிப்பில் கல்வி உதவித்தொகை, 83 நபர்களுக்கு ரூபாய் 7 இலட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகை, 56 நபர்களுக்கு ரூபாய் 6 இலட்சத்து 97 ஆயிரத்து 500 மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை, 2 நபர்களுக்கு ரூபாய் 2 இலட்சத்து 5000 மதிப்பில் விபத்து நிவாரண உதவித்தொகையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

 388 நபர்களுக்கு புதிய மிண்ணனு குடும்ப அட்டை வழங்குதல், திருமண உதவித்தொகை வழங்குதல், ஆதரவற்ற விதவைச் சான்று, பட்டா மாற்றம் செய்து சிட்டா, உட்பிரிவு செய்து பட்டா மாற்றம், தேசி தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் மல்லிகை பதியங்கன்றுகள், இட்லிபூ பதியங்கன்றுகள், பாலித்தின் விரிப்பு மற்றும் அறுவடை கூடை, விசைத்தெளிப்பான், விவசாய கருவிகள் விளக்கு பொறி வழங்குதல், பாரத பிரதமரின் பாசன விவசாயி திட்டத்தின் கீழ் 50 நபர்களுக்கு ரூபாய் 15 இலட்சத்து 67 ஆயிரத்து 996 நுண்ணீர் பாசன மான்யம் வழங்குதல் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலி 4 நபர்களுக்கு வழங்குதல், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூபாய் 7 இலட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் வங்கிக்கடன் மற்றம் தனிநபர் கடன் என மொத்தம் 1187 பயனாளிகளுக்கு ரூபாய் 68 இலட்சத்து 59 ஆயிரத்து 637 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி. வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி. பேசியதாவது: தமிழக அரசின் திட்டங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர் புறங்களில் மிக சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு மனுநீதி நாள் முகாம் மூலம் அரசு அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று ஏழை மக்களின் நிலையை அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டு ஒரு வார காலத்திற்குள் உரிய தீர்வு வழங்கி வருகின்றார்கள். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 40 சதவீதம் ஊனமுற்றோர்க்கான அடையாள அட்டை இருந்தால் அனைத்து உதவித்தொகைகளும் வழங்கப்படும். பொருளாதார கடன், உபகரணங்கள் போன்ற கடனுதவிகளும் வழங்கப்படுகிறது. சமுகநலத்துறையின் சார்பில் திருமணநிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது. பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண்குழந்கைகளை படிக்க வைக்க உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் குறைந்த அளவில் நீரில் அதிக அளவு மகசூல் செய்யப்படுகிறது. மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் கர்ப்;பிணிப்பெண்களுக்கு ரூ.12 ஆயிரம் நிதி உதவியை தமிழக அரசு ரூபாய் 18 ஆயிரமாக உயர்த்தி ஆணையிட்டுள்ளது. இத்திட்டங்கள் ஏழை தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கர்ப்பிணிப்பெண்கள் பிரசவத்தை அரசு மருத்துவமனைகளில் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அம்மா குழந்தைநல பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.

பட்டா மாற்றம் தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 198 அரசு இ-சேவை மையங்கள் உள்ளன. இம்மையத்தில் பொதுமக்கள் தங்களது மனுக்களை பதிவு செய்தால் தங்களது அழைபேசிக்கு(ஊநடட Phழநெ) குறுஞ்செய்தி அனுப்பப்டும் அதற்கு பின் பட்டா மாற்றம் ஆணை பெற்றுக் கொள்ளலாம். மேலும் கணினி மையத்தில் சாதிச்சான்று, வருமானச்சான்று என பல்வேறு சான்றுகள் பெற்றுக் கொள்ளலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக சமுக நலத்துறையின் கீழ் திருமண நிதியுதவியும் ஆன்லைன்லில் பதிவு செய்யப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சுமார்ட் கார்டு அதாவது வங்கி அட்டை போன்று குடும்ப அட்டைக்கு பதிலாக வழங்கப்படுகிறது. தங்களது தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தவுடன் அருகில் உள்ள ரேசன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.

பெண் கல்வி ஊக்குவிக்க விலையில்லா பாடப்புத்தகம், உபகரணங்கள், விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி ஆகியவை வழங்கப்படுகிறது. 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளிக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஊராட்சி, பேருராட்சி, நகராட்சிகளில் குடிநீh,; தெருவிளக்கு, சிறுபாலம், போன்ற வசதிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. பேசினார்.

இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஏ.ஜி.ராஜராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் மீனாட்சி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் சண்முகராஜசேகரன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்