முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல், முன்தேதியிட்டு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதுகுறித்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு அலுவலர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முன்தேதியிட்டு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு 244 ரூபாய் முதல், 3,080 ரூபாய் வரை கூடுதல் ஊதியம் கிடைக்கும் என்றும், 18 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago