முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் சேலம் மாவட்டத்திற்கு வருகை குறித்து கலெக்டர் வா.சம்பத், தலைமையில் ஆலோசனை கூட்டம்

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      சேலம்
Image Unavailable

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நாளை மறுதினம் (28.04.2017) சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்து புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டிமுடிக்க முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்து, அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக நேற்று (26.04.2017) கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் வா.சம்பத், தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

ஆலோசனை கூட்டம்

அனைத்து துறை அரசு அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் தொடங்கவுள்ள புதிய திட்டப்பணிகள் மற்றும் அடிக்கல் நாட்டுவதற்கு தயாராக உள்ள கட்டிடங்கள், திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள கட்டிடங்கள் குறித்த விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது.மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தால் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து மேற்கொள்ளப்பட்டுவரும் போர்கால நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு தங்குதடையில்லாத குடிநீரை வழங்கும் வகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆய்வில் விவாதிக்கப்பட்டது.

 

மேலும், இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேலைவாய்ப்புத்துறை, சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே.கவிதா, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் லட்சுமி, பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) செயற்பொறியாளர் சிவசாமி, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) செயற்பொறியாளர் சுப்ரமணி, மகளிர் திட்ட அலுவலர் ஈஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.விஜய்பாபு, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago