முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 10ந் தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 2 ஆயிரத்து 146 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 திருவண்ணாமலையில் வரும் 10ந் தேதி நடைபெறவுள்ள சித்ரா பவுர்ணமி விழாவையட்டி 2 ஆயிரத்து 146 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தி.மலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.

 சிறப்பு பேருந்துகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் சித்ரா பவுர்ணமி சிறப்புக்குரியது. அதன்படி இந்த ஆண்டுசித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அடுத்த மே 10ந் தேதி அதிகாலை 12.09 மணிக்கு தொடங்கி மறுநாள் 11ந் தேதி அதிகாலை 3.04 மணிக்கு நிறைவடைகிறது. எனவே 10ந் தேதி இரவு சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று சுமார் 20 லட்சம் பக்தர்கள் வரை கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையட்டி சித்ரா பவுர்ணமி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தி.மலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்றது.

அதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, கோவில் இணை ஆணையர் சி.ஹரிபிரியா, காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ரவளிபிரியா, ரூரல் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் தேவநாதன் உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சித்ரா பவுர்ணமி அன்று பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையை முறைப்படுத்தி விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சித்திரை மாத கடும் வெயிலில் பக்தர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க தேவையான நிழற்பந்தல், குடிநீர் வசதி செய்து தர கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விழுப்புரம், சேலம், திருச்சி, கும்பகோணம், ஆகிய கோட்டங்களிலிருந்து சுமார் 2,140 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வசதிக்காக சுமார் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்