முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அளவில் நடைபெற்ற தொழில்நுட்பம் சார்ந்த போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி சாதனை

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -இந்தியஅளவில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் போட்டியெனும் தொழில்நுட்பம் சார்ந்த போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியின் இணைத் தலைவர் ஆர்.எஸ்.கே.சுகுமாறன் கல்லூரி வளாகத்தில் நிருபர்களிடம் தெரிவிக்கையில், நமது நாட்டில் உள்ள 30 துறைகளில் 533 தேவைகள் உள்ளன. இதனை அகில இந்திய தொழில்நுட்ப கழகம், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2017 என்ற தொழில்நுட்பம் சார்ந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது இடைவிடாமல் 36 மணி நேரம் டிஜிட்டல் புரோகிராம் ஆகும். இதில் 6400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி நிறுவனங்கள் பங்கேற்றன. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 7531 குழுக்கள் பங்கு பெற்றன. 11 ஆயிரம் போட்டியாளர்கள் கொண்ட 1266 குழுக்களின் தீர்வுகள் சரியென தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியா முழுவதும் 33 மையங்களில் ஏப்ரல் 1,2 ஆகிய தேதிகளில் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியைச் சேர்ந்த 3 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

டிரக் அலார்ட் பிரச்சனைக்கு பி.எஸ்.என்.ஏ. கல்லூரி மாணவர்கள் கனரக வாகனங்கள் அதிக அளவில் பாரம் ஏற்றிச் செல்வதை கண்டுபிடிக்க முடியும். தேவையில்லாத பொருட்களை ஏற்றிச் செல்வதையும் உடனுக்குடன் டிஜிட்டல் புரோகிராம் மூலம் அந்தந்த பகுதி ஆர்.டி.ஓ.விற்கு உடனடியாக எஸ்.எம்.எஸ். செல்லும். அதன் மூலம் விதிமுறைகளை மீறுபவர்களின் வாகனம், சென்று கொண்டிருக்கும் பகுதி, அதன் உரிமையாளர் ஆகியவை உடனடியாக ஆர்.டி.ஓ. அறிந்து அபராதம் வசூலிக்க முடியும். அபராதத் தொகை ஆன்லைன் மூலமாகவே அரசுக்கு சென்று விடும்.

இக்கண்டுபிடிப்பை பி.எஸ்.என்.ஏ. கல்லூரியின் பல்வேறு துறையைச் சேர்ந்த மாணவர்கள் தருண்குமார், வரதராஜன், விக்னேஷ் ராஜா, கார்த்திகேயன், நாகராஜன், நிவேதா, முனைவர் ஹேமலதா, அருள் பிரசன்னா ஆகியோர் சாதித்ததன் பேரில் தேசிய அளவில் 5ம் இடமும், டிலோட்டி பிரிவில் முதலிடமும், ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும், மகாராஷ்டிரா மாநிலம் நாக்ஞீரில் பெற்றுள்ளனர்.

இதேபோன்று தொழில் நிறுவனங்களில் வேலைக்கு கணினி மற்றும் அலைபேசி மூலம் எளிய முறையில் கண்டறிந்து அவர்களின் திறமைக்கேற்ற வேலையும் கிடைக்கும் வகையில் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி மாணவர்கள் அஜய்குமார், மகேஸ்வரன், முத்துபிரியா, அரவிந்த் வெங்கடேசன், பாலாஜி, கௌசிக், முனைவர்கள் கருப்பாத்தாள், சக்திவேல்முருகன் ஆகியோர் சாதித்துள்ளனர். மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் தேசிய அளவில் 6வது இடத்தினை இம்மாணவர்கள் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

3வதாக ஆளில்லா ரெயில்வே கேட்டில் 5 கி.மீ. தூரத்திற்கு முன்னதாகவே ரயில் வருவதை அறியும் வகையிலும் 2 கி.மீ. அருகே ரயில் வரும் போது தானாகவே கதவு அடைத்துக்கொள்ளும் வகையிலும், ரெயில் சென்ற பின்னர் தானாகவே கேட் திறக்கும் வகையிலும் கண்டுபிடித்துள்ளனர். இதனை மாணவர்கள் ஜெகநாத், இந்திரஜித், லெனின், சாலமன், பிரியதர்ஷினி, பிரியதர்ஷினி பாசில் முகமது, பேராசிரியர்கள் கார்த்திகேயன், தங்கதமிழ்செல்வி ஆகியோர் சாதித்ததோடு ராஜஸ்தான் மாநிலம் உதய்ஞீரில் நடைபெற்ற இப்போட்டியில் ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு இத்தொழில்நுட்பத்தை கொண்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் விருது பெற்ற 3 குழுக்களுக்கும் கல்லூரியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். பேட்டியின் போது கல்லூரி முதல்வர் மகேந்திரன், பதிவாளர் சின்னக்காளை, போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வின்சென்ட் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்