முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிசை மாற்று வாரியத்தில் பொறியாளர்கள் பணி நியமன ஆணை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  குடுசை மாற்நு வாரியத்தில் பொறியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை தலைமைசெயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

ரூ.7826.55 கோடியில் ...
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- மத்தியஅரசு "பிரதம மந்திரி வீட்டு வசதிதிட்டத்தின் கீழ்அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்" ஜூன் 2015-ல் அறிவித்தது. அதன்படி, நாட்டிலுள்ளவீடற்றமக்கள்அனைவருக்கும் 2022ம் ஆண்டிற்குள் வீடு கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் வீட்டுவசதி தேவைகள் கணக்கெடுக்கும் பணிமாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முடிவுற்று, 8,03,790 குடும்பங்களுக்கு வீடுகள் தேவையென கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுமத்திடமிருந்து அதிக அளவில் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதுவரை, ரூ.7826.55 கோடி மதிப்பீட்டில் 2,21,692 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

பொறியாளர்கள் தேர்வு
இத்திட்டத்தை செயல்படுத்த 64 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 17 இளநிலைப் பொறியாளர்களை தேர்வு செய்யும் பணிஅண்ணா பல்கலைக் கழகத்திடம் வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக் கழகம், கடந்த 29.01.2017 அன்று எழுத்துத் தேர்வு நடத்தி, அதில் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில் 1:5 என்ற விகிதாச் சாரத்தில் தேர்வானவர்களின் பட்டியலை முடிவு செய்தது. கடந்த, 13.03.2017 முதல் 17.03.2017 வரை தேர்வானவர்களிடம் சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டது.

பணி நியமன ஆணை
இறுதியில் நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்நடவடிக்கையின் ஒவ்வொரு நிகழ்வின் முடிவும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்றுவாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகத்தில் தேர்வானவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்றுவாரிய முதன்மைச் செயலர் மேலாண்மை இயக்குநர் ‌ஷம்பு கல்லோ லிகர், ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்