முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்றாம்பள்ளி நாயன செருவு கிராம மனுநீதி நாள் முகாமில் 170 பயனாளிகளுக்கு ரூ.20,53,798- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்டம் நாட்;றாம்பள்ளி வட்டம் நாயனசெருவு கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் மரு.கா.ப.கார்த்திகேயன்.முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் சச்சிதானந்தன் வரவேற்புரையாற்றினார்.

நடவடிக்கை

இம்மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் பேசியதாவது:-பொதுமக்களை தேடி அரசு நிர்வாகமே அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சிறப்பு மனுநீதிநாள் முகாம் மாதம் தோறும் நடைப்பெறுகிறது. அதனடிப்படையில் இந்த மனுநீதிநாள் முகாம் சிறப்பாக இன்று நடைபெறுகிறது. மக்களின் அடிப்படை தேவைகளான உணவு உடை மற்றும் இருப்பிடம் இவற்றிற்கு அரசு உத்திரவாதம் அளித்து மக்களுக்கு வழங்கி வருகிறது. அரசால் தற்போது இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி அனைவருக்கும் சரியான அளவு உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. 5 பேர் கொண்ட குடும்;பத்திற்கு 20 கிலோ அரிசியும் அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசியும் தேவையான அளவு 5கிலோ வரை கோதுமையும் வழங்கப்படுகிறது. அதேபோல குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகள் ஆண்டுதோறும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தற்போது பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பொதுதகவல் கணக்கெடுப்பின்படி வீடில்லாத அனைவருக்கும் வீடுகளும் தமிழக முதலமைச்சரின் பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளும் வழங்கப்படுகிறது.

உணவு உற்பத்தியை வழங்கி வரும் விவசாயிகளின் வாழ்க்கை பொருளாதாரத்தை பாதுகாக்கும் பணிகளையும் அரசு செய்து வருகிறது. அதனடிப்படையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரண நிதியுதவிகளை வழங்கியுள்ளது. மேலும் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக விவசாயம் குறைந்துள்ளது. இவற்றை கழைய அரசு குறைந்த நீரை கொண்டு விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு அரசு முழு மான்யத்துடன் சொட்டுநீர் பாசன திட்டத்தை செயல்படுத்தி ஊக்குவித்து வருகிறது இவற்றை இப்பகுதிகளை சார்ந்த விவசாயிகள் பெற்று பயன்பெறலாம்.

வெயில் தாக்கம்

 

தற்போது கோடைகாலத்தினால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் ஏற்கனவே பருவமழை பொய்த்துப்போன காரணத்தினாலும் வறட்சி அதிகமாக நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தீவணம் மற்றும் குடிநீர் போதிய அளவு கிடைக்கிறதா என்பதை அரசு நிர்வாகம் உறுதி செய்து கொள்கிறது. இதனை அரசாங்கத்தின் கடமையாக மட்டுமே பொதுமக்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து கிடைக்கும் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் வேலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே கணியம்பாடி வட்டாரத்தில் நாகநதிபுணரமைப்பு திட்டத்தின் கீழ் நீர் வறத்து கால்வாய்களில் நிலத்தடி நீராத்தினை பெருக்கும் வகையில் மழைநீரை 10 அடி நீளம் மற்றும் 3அடி அகலம் கொண்ட உரைகிணற்றில் வழியாக சேகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் அடுத்தகட்டமாக நாட்றாம்பள்ளி கிராம பகுதிகளில் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

.இவ்விழாவில் வருவாய்துறை சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் ரூ.5,41,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத்துறையின் மூலம் ரூ.2,89,388- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மூலம் ரூ.32,910- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக 7 பயனாளிகளுக்கு பிரதமந்திரியின் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் ரூ11,90,000ஃ- மதிப்பீட்டில் வீடுகளுக்கான சாவிகளையும் மேலும் வாரிசு சான்றிதழ். சாதிசான்றிதழ், சிறுகுறு விவசாயிகள் சான்று மற்றும் மின்னணு குடும்ப அட்டை என ஆக மொத்தம் 170 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்தி 53ஆயிரத்தி 798- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் துறை துணை ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரமேஸ்வரி, உதவி ஆணையர் கலால் (பொ) அப்துல்முனிர், மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.இளங்கோ, துணை இயக்குநர் (கால்நடை) மரு.ராஜேந்திரன், இணை இயக்குநர் வேளாண்மை(பொ) வாசுதேவரெட்டி வட்டார மருத்துவ அலுவலர் மரு.திருலோகன், சமூக நல விரிவு அலுவலர் மலர்கொடி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சரஸ்வதி, தனிவட்டாட்சியர் பிரபுகணேஷ் வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்