முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பேராயர் மரு.எம்.பிரகாஷ் கருத்து கேட்பு கூட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்iயினர் நல ஆணையத்தின் சார்பில் கருத்து கேட்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் கூடுதல் கூட்டரங்கில் நடைப்பெற்றது.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

கோரிக்கை

இக்கூட்டத்தில் 65 கோரிக்கை மனுக்கள் சிறுபான்மையின நல ஆணையத்தின் மூலம் பெறப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு இறுதி டிசம்பர்-18-ம் தேதி சிறுபான்மையினர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் விலையில்லா தையல் இயந்திரம் 10 நபர்களுக்கு ரூ.33,550ஃ- மதிப்பீட்டிலும், டாம்கோ மூலமாக 12 சிறுபான்மையின மக்களுக்கு ரூ.5,49,675ஃ- மதிப்பீட்டில் கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இந்தியன் வங்கி மூலம் 97 நபர்களுக்கு ரூ.31 இலட்சத்து கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் 2015-16- கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்திற்கு பள்ளி படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை விண்ணப்பித்த 2256 பள்ளி படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு 526 மாணவஃ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை 100மூ மத்திய அரசால் சம்மந்தப்பட்ட மாணவ ஃ மாணவியர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக மின்னனு பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்டது. 2016- 17 ஆம் ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் தமிழை முதன்மை பாடமாக பயின்று முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் மொத்த 12 மாணவ மாணவியர்களுக்கு ரூ.36,000 பொதுப்பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய மதரஸாக்களில் வேலை செய்யும் இஸ்லாமியர்கள் 18 வயது நிறைவு செய்தும் 60 வயதுக்கு மேற்படாதவர்களாகவும் இருத்தல் வேண்டும் எனவும், பதிவு செய்த உறுப்பினருக்கு அடையாள அட்டை இவ்வாரியத்தால் வழங்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 234 பேர் இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளன். இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு உதவியாக பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்ட வருகிறது. இதுவரை கல்வி உதவிதொகை 112 நபர்களுக்கு ரூ.2,08,500ஃ-ம், கண் கண்ணாடி 33 நபர்களுக்கு ரூ.16,500-ம், திருமண உதவித்தொகை 13 நபர்களுக்கு ரூ.26,000-ம், ஈமச்சடங்கு 2 நபர்களுக்கு ரூ.30,000-ம் உதவித்தொகையும் மற்றும் மகப்பேறு கருச்சிதைவு உதவித்தொகையாக 4 நபர்களுக்கு ரூ.21,000-ம் இதுபோன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு சிறுபான்iயினர்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.

இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர்,இ.கா.ப, மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா, கலெக்டர் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம்;, கோட்டாட்சியர்கள் இராமமூர்த்தி, கவிதா மற்றும் தருமபுரி முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசன் , சிறுபான்மையினர் பிரிவு தலைவர் அன்வர்பாஷா, தருமபுரி மாவட்ட அரசு காஜி பஜல் கரிம் மற்றும் தொன்போஸ்கோ கல்லூரி முதல்வர், மரியசூசை, உட்பட துறை ரீதியான அலுவர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்