முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் குறித்து சட்டம் இயற்ற வேண்டும் : மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவுகளுக்கு சட்டடப்பூர்வ அங்கீகாரம் வழங்கவும், நிதி விவகாரங்களை முறைப்படுத்தவும் மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதிக அளவில் பெருகியதால், அவற்றுக்கு கிடைக்கும் நன்கொடைகள் தொடர்பான நிதி விவகாரங்களை கண்கணிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. 

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேகர் தலைமையிலான அமர்வு முன்பாக இதுகுறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. என்.ஜி.ஓ. எனப்படும் தன்னார்வ அமைப்புகளை கட்டுப்படுத்தவும், அவற்றுக்கு நன்கொடையாக வரும் நிதி விவகாரங்களை கையாளவும், சட்ட விதிகளை உருவாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு அப்போது அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பான தனது நிலையை 8 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்