முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்திற்கான முன்னுரிமை கடனாக ரூ.3617 கோடி வழங்கிடும் கடன் திட்ட அறிக்கை : கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டார்

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      கரூர்

கரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நேற்று (26.04.2017) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் 2017-18ம் ஆண்டுக்கான முன்னுரிமை கடனாக ரூ.3617 கோடி வழங்கிடும் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

 கடன் திட்டஅறிக்கை

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: கரூர் மாவட்டத்திற்கு 2017-18ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்ட தனியார் மற்றும் கூட்டுறவு ஊரக வங்கிகள் வழியாக வேளாண் கடனாக ரூ.1713.02 கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தர வர்க்க தொழில் மற்றும் ஏற்றுமதி கடனாக ரூ.953.93 கோடி,இதர முன்னுரிமை கடனாக ரூ.950.05 கோடி என மொத்தம் ரூ.3617 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறைக்கு மட்டும் 47 சதவீதம் தொகை கடனாக ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு 26 சதவீதமும், இதர முன்னுரிமை கடனுக்கு 27 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டிற்கான கடன் இலக்கை எய்திடவும், தகுதியான நபர்களுக்கு கடன்களை வழங்கி மாவட்டத்திற்கு வளம் சேர்க்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், ரிசர்வ் வங்கி மேலாளர் தியாகராஜன், ஐஓபி முதன்மை மேலாளர் ஜோபச்சன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாலகணே~;, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், நபார்டு வங்கி மேலாளர் பரமே~;குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago