முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்ககர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர் உடலுக்கு அமைச்சர் காமராஜ் அஞ்சலி

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      திருவாரூர்
Image Unavailable

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் நல்லூரி ஊராட்சி அவிச்சக்குடி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் பத்பநாபன் , மற்றும் நீடாமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்த நாராயணன் மகன் செந்தில்குமார் ஆகியோர் உயிரிழந்தனர். உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் மத்திய ரிசர்வ் காவல் படை துணை இராணுவ வீரர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தமிழக அரசின் சார்பிலும், தமிழக முதலமைச்சர் அவர்களின் சார்பில் ஆழ்ந்த இரங்களையும்,அனுதாபத்தையும் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் அறிவித்த கருணைத்தொகை தலா.ரூ.20 லட்சத்திற்கான காசோலையினை மத்திய ரிசர்வ் காவல் படை துணை இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் கூறினார்.

நான்கு வீரர்கள்

பின்னர் செய்தியாளர்ளிடம் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது..சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த நான்கு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் நல்லூரி ஊராட்சி அவிச்சக்குடி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் பத்பநாபன் , மற்றும் நீடாமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்த நாராயணன் மகன் செந்தில்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மத்திய ரிசர்வ் காவல் படை துணை இராணுவ வீரர்களாக பணியாற்றி நாட்டிற்காக உயிரிழந்த அன்பு சகோதரர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தமிழக அரசின் சார்பிலும், தமிழக முதலமைச்சர் அவர்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்களையும்,அனுதாபத்தையும் தெரிவித்துள்ளோம். தமிழக முதலமைச்சர் அறிவித்த கருணைத்தொகை தலா.ரூ.20 லட்சத்திற்கான காசோலையினை அவர்களது குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் கூறியுள்ளோம்.

மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.துரை, வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, செல்வசுரபி, வலங்கைமான் வட்டாட்சியர் இஞ்ஞாசிராஜ், நீடாமங்கலம் வட்டாட்சியர் ஜானகி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago