முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த, நல்லூர், திட்டச்சேரியை சார்ந்த திருமுருகனின் உடலுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் மரியாதை

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      சேலம்
Image Unavailable

 

சத்தீஷ்கார் மாநிலம், ராயப்பூரில் நேற்றைய தினம் நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த கெங்கவல்லி வட்டம், நல்லூர், திட்டச்சேரியை சார்ந்த திருமுருகனின் திருவுடலுக்கு இன்று (25.04.2017) உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்த ரூ.20 லட்சத்திற்கான நிவாரணத்தொகையினை வழங்கினார்.

அமைச்சர் மரியாதை

சத்தீஷ்கார் மாநிலம், ராயப்பூரில் நேற்றைய தினம் நக்சலைட்டுகள் தாக்குதலினால் மத்திய ரிசர்வ் படையினை சார்ந்த 25 வீரர்கள் உயிரிழந்தனர். தமிழக முதலமைச்சர் அவர்கள் துயரச் சம்பத்தில் உயிரிழந்த தமிழகத்தை சார்ந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து, அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

தாக்குதல் சம்பவத்தில் சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், நல்லூர் திட்டச்சேரி பகுதியை சார்ந்த என்.திருமுருகன் என்பவர் வீரமரணம் அடைத்தார். இதனை தொடர்ந்து அவரது திருவுடலானது அரசின் உரிய மரியாதையுடன் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டு, அவரது சொந்த ஊருக்கு இரவு 07.00 மணி அளவில் கொண்டுவரப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரது திருஉடலுக்கு தமிழக அரசின் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி அவரது பிரிவால் வாடும் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்த ரூ.20 லட்சத்திற்கான நிவாரணத்தொகையினை வழங்கினார். தொடர்ந்து கலெக்டர் வா.சம்பத், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.காமராஜ் அவர்கள், கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் அ.மருதமுத்து, ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னதம்பி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர் உயிரிழந்த திருமுருகன் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago