முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.229.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி :அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      புதுக்கோட்டை
Image Unavailable

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் படி புதுக்கோட்டை தஞ்சை சாலையில் உள்ள முள்ளூர் கால்நடைப் பண்ணை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியினை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ். தலைமையில, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து முன்னிலையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு செய்தியாளகளிடம் பேசியதாவது .

 கட்டிடபணிகள்

முன்னாள் முதலமைச்சர் அம்மா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.229.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததின் அடிப்படையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமணை கட்டடப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது . இக்கல்லூரி சுமார் 9 லட்சம் சதுரடியில் ரூ.56.16 கோடி மதிப்பில் 7 கட்டடங்கள, ரூ.61.31 கோடி மதிப்பில் 13 குடியிருப்புகளும் உட்பட என மொத்தம் ரூ.229.46 கோடி மதிப்பில் 31 கட்டடங்கள் கட்டப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது .

இக்கல்லூரி கட்டடங்களில் இரு விரிவுரையாளர்; அரங்கம் , நூலகம் , கலையரங்கம், ஆய்வுக்கூடம், பயிற்சிப் பட்டறை அரங்கம், 20.559 சதுர மீட்டர்; பரப்பளவில் மருத்துவமனைக்கென 700 படுக்கைகள் கொண்ட அறைகள் வெளி நோயாளிகள் பிரிவு , டிஎஸ்எஸ்டி பிணவறை, கட்டணம் கழிப்பிடம்,நவீன சமையல் கூடம் , இரு சக்கரம் வாகனம் நிறுத்துமிடம் , அவசர ஊர்தி நிறுத்துமிடம் ,வங்கி,தபால் நிலையம் ஆகிய மொத்தம் 41195 சதுரமீட்டர் பரப்பளவிலும் கட்டப்பட்டுள்ளது . ஆண் பெண் இருபாலருக்கென தனித் தனி விடுதி கட்டடம் ,முதல்வர் குடியிருப்பு ,இருக்கை மருத்துவ அலுவலர்கள் குடியிருப்பு ,,சி,டிபிரிவு குடியிருப்புகள், உடற்பயிற்சிக் கூடம் ,சிஆர்ஆர்ஐ ஆண்,பெண் குடியிருப்புகள் என மொத்தம் குடியிருப்புக் கட்டடங்கள் 22644 சதுர மீட்டர் பரப்பளவு உள்பட மொத்தம் 84.399 சதுரமீட்டர் (சுமார் 9 லட்சம் சதுர அடி) பரப்பில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது

இதன்மூலம் புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ளது சிறிய வேளைகள் விரைவில் முடிக்கப்பட்டு புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் . இதில் 2017-2018 கல்வியாண்டில் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். புதிய மாணவ சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கிவிட்டது என்றும் செய்தியாளர் பயணத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ..இரத்தினசபாபதி (அறந்தாங்கி), பி.ஆறுமுகம் (கந்தர்வக்கோட்டை), மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.சீனிவாசன், இணைஇயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.சுரேஷ்குமார், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் சேட் என்ற அப்துல்ரகுமான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கர், நகராட்சி ஆணையர்(பொ) ஜீவாசுப்பிரமணியன், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்