முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக வேரோடு அகற்றும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      திருவள்ளூர்

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சென்னை உயர்நீதிமன்ற, மதுரை கிளை உத்திரவின்படி சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக வேரோடு அகற்றும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.

இருமடங்கு

 அனைத்து நகராட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு பொறியாளர்கள், ரயில்வே பொறியாளர்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பொறியாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தொடர்புடைய அனைத்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் திருவள்ளுர் மாவட்டத்தில் புறம்போக்கு நிலங்களில் உள்ளவற்றை தொடர்புடைய துறை அலுவலர்கள் மூலமாகவும், பட்டா நிலங்களில் உள்ளவற்றை அந்தந்த பட்டாதாரர்களுக்கு நோட்டீஸ் அளித்தும் அகற்றும் பணியினை வேகப்படுத்துமாறும் அறிவுறுத்தினார். மேலும், தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை பட்டாதாரர்களே அகற்றவில்லை என்றால் அரசே அவற்றை அகற்றி உரியவர்களிடமிருந்து அதற்கான தொகை இரு மடங்காக வசூலிக்கப்படும் என்றும், தனியார் நிலங்கள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை சம்மந்தப்பட்ட நிறுவனங்களே உடனடியாக அகற்றிட வேண்டும் என்றும், இல்லையெனில் நீதிமன்ற ஆணையின்படி உயர்நீதிமன்ற வழக்கில் தரப்பினராக சேர்க்கப்படுவார்கள் என்றும் திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சட்டம்) , வருவாய் அலுவலக மேலாளர்(நீதியியல்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்