முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூரில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ச.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர் நலன் துறையின் சார்பில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   தலைமையில் நடைபெற்றது.

உரிய நடவடிக்கை

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை  நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இம்மாதத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட  கலெக்டர்  தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விண்ணப்பங்களை வழங்கினார்கள். விண்ணப்பங்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர்  அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  கடந்த முறை நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  பெறப்பட்ட விண்ணபங்கள் மற்றும் நிலுவையிலுள்ள விண்ணப்பங்கள் மீது  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்  ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, படைவீரர் கொடிநாள் நிதி வசூலில் அதிக நிதி வசூல் செய்தமைக்காக தனி மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் புவியியல் சுரங்கத்துறை துணை இயக்குநர் ஆகியோருக்கு தமிழக அரசின் வெள்ளி  பதக்கமும் , மேதகு ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளரின் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர்  வழங்கினாhகள்.

இக்கூட்டத்தில்,  முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் சந்திரசேகர் , முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்