முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலை சுற்றுலா பகுதியாக்க எம்.பி உதயகுமார் ஆய்வு

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      திண்டுக்கல்
Image Unavailable

நிலக்கோட்டை-நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலை சுற்றுலா பகுதியாக்க எம்.பி உதயகுமார் தத்து எடுத்து அதிகாரிகள் தலைமையில் ஆய்வுப் பணிகள்  நடந்தது.

   திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் வைகை ஆற்றங்கரையில் புராண வரலாற்று பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயில் இந்துசமய அறநிலை துறையின் கட்டுபாட்டில் உள்ளது.¢ இங்கு சனி, ஞாயிறுக்¢ கிழமைகளில் பக¢தர்கள் கூட்டம் அதிகமாக இருக்¢கும் மற்ற நாட்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்¢கவும், ஈமசடங்கு செய்ய அதிக அளவில் பக¢தர்கள் வருவார்கள். வரும் பக¢தர்கள் அங்கு உள்ள புரோகிதர்களை வைத்து தான் இச்சடங்குகளை செய்வர்.அது போல் குளிக்கும் பெண்கள் மற்றம் இதர நபர்கள் திறந்த வெளியில் குளிக்க வேண்டிய அவலை நிலை ஏற்ப்பட்டுள்ளது.மேலும் திறந்த வெளியில் மலஜலம் கழிக்க கூடாது என செல்லும் மத்திய, மாநில அரசுகள் இப்படி தினத்தோறும் ஆயிரக்கானனோர் வரும் மிகவும் புகழ்பெற்ற கோவில் பகுதியில் பெயருக்கு கூட சுகாதாரம் கழிப்பறை மற்றும் குளியல் அறை இல்லாததை நினைத்தால் மிகுந்த அளவில் வேதனை அளிக்கிறது என பொதுமக்கள்,பக்தர்கள் என அனைத்து தரப்பினர்களும் வேதனையில் புலம்பி தவிக்கிறார்கள்.

     முன்னோர்களுக்¢கு திதி கொடுக¢கும் முக¢கிய ஸ்தலங்கலான காசி,ர £மேஸ்வரம் போன்று வைகை ஆற்றில் தண்ணீர் செல்லும் போது அதிகளவு தமிழக முழவதும் பக்¢தர்கள் வருகிறார்கள். அப்படிப்பட்ட இடத்தை ஆன்மிக சுற்றுலா தளமாக கொண்டு வர அரசு பல்வேறு நிலையில் அடிப்படை வசதிகளை செய்து வருகிறது.

    இதனை திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் பொதுமக்கள் கோரிக்கை பாராளுமன்றத்தில் வைத்து நிலக்கோட்டை ஊராட்சி ஓன்றியம்,பிள்ளையார்நத்தம் ஊராட்சியை பிரதமர் கிராம தத்து எடுத்தல் திட்டத்தின்படி பிள்ளையார்நத்தம் ஊராட்சியை தத்து எடுத்து மத்திய அரசின் நிதியில் 1 கோடியை பெற்று அதன்படி பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் அணைப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட சுமார் 9 கிராமங்களில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளை செய்தவற்காக நேரில் திண்டுக்க்ல சுற்றுலா துறை திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் தலைமையிலும், மாவட்ட அலுவலர் உமாதேவி முன்னிலையிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது பொதுமக்கள் நீண்ட காலமாக அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் தியான மண்டபம்,சுகாதாரமான கழிப்பறை, பெண்கள் தனியாக குளியலறை மற்றும் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் கூறியாதாவது.பிரமதர் கிராம தத்து எடுத்தல் திட்டத்தில் பிள்ளையார்நத்தம் கிராமத்தை தேர்வு செய்து தத்து எடுத்துள்ளோம் எனவே ஆன்மிக சுற்றுலா தளமாக என்னென்ன அடிப்படை பணிகளை செய்ய இருக்கிறோம் என பேசினார்.இந்த ஆய்வின் போது அப்போது உடன் சட்டமன்ற உறுப்பினர் தங்கதுரை, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி, முன்னாள் நிலக்கோட்டை ஊராட்சி ஓன்றிய தலைவர் யாகப்பன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சேகர், ஜெயலிதா பேரவை ஓன்றிய செயலாளர் ராஜேந்திரன், வட்டரா ஆணையாளர் லெட்சுமிகலா, வட்டரா வளர்ச்சி அலுவலர் (கி,ஊ) செல்வராஜ். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் ஹரிகரன், தேவி, மாநில பொது குழு உறுப்பினர் சரவணக்குமார், ஒன்றிய துணை செயலாளர் நல்லதம்பி, உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பகுதி பொதுமக்கள் அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில் பகுதி ஆன்மிக சுற்றுலா தளமாக அறிவிக்க இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்