முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

+2 விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கான உழைப்பூதியம் உயர்வு தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைபப்பு வரவேற்பு

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      வேலூர்

 

 

விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கான உழைப்பூதியம் உயர்வு தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்பு. விடைத்தாள் மதிப்பீட்டு பணி புறக்கணிப்பு போராட்டத்தின் போது சென்னை அரசு தேர்வுகள் இயக்குநரகம் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தேர்வு பணிகளுக்கான உழைப்பூதிம் உயர்த்தி ஆணையிட்டுள்ளது. இதனை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூடட்மைப்பின் சார்பிலும் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு பேரமைப்பின் சார்பிலும் வரவேற்கின்றோம்

 

 

தமிழக முதல்வர் எடப்படி கே.பழனிச்சாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அரசுத்தேவுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம். இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் மற்றும் டேக்டோ பேரமைப்பின் மாநில இணை அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

 

புறக்கணிப்பு போராட்டம்

பொதுக்கல்வி பாடப்பிரிவில் உள்ள பல்வேறு பாடங்களுக்கான மதிப்பீட்டு பணியில் 24லிருந்து 20ஆக குறைத்தது போல பாரபட்சமின்றி தொழிற்கல்வி பாடத்திற்கும் 24லிருந்து 20ஆக குறைத்து வழங்கிட கோரியும், கணினி அறிவியல் பாடத்திற்கு நாளொன்றுக்கு 40லிருந்து 30ஆக குறைத்து வழங்கிட கோரியும் மேலும் ஒரு விடைத்தாள் மதிப்பீட்டு மதிப்பூதியம் ருபாய் ஏழு பைசா ஐம்பதிலிருந்து பத்து ருபாயாகவும் கணினி அறிவியல் பாடத்திற்கு ஒரு விடைத்தாளுக்கு மூன்று ரூபாய் எழுபத்தைந்து காசுகளாக உள்ளதை ரூபாய் ஆறு என உயர்த்தி வழங்கிட கோரி தமிழகம் முழுவதும் வேலூர், திருச்சி, மதுரை, கோவை, கடலூர் உள்ளிட்ட மையங்களில் மாநில அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், கணினி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் எஸ்.கோபி, தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் த.இராமச்சந்திரன், எஸ்.ரெங்கநாதன், வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மாதவன் எம்.இராஜாராம், ஆகியோர் தலைமையில் தொழிற்கல்வி பாட மையங்களிலும், கணினி அறிவியல் பாடங்கள் உள்ள மையங்களிலும் விடைட்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

 

வேலூர் மாவட்டத்தில் முகாம் அலுவலர் து.மனோகரன் மற்றும் பி.பிரியதர்ஷிணி மற்றும் ஆசிரியர் தேர்வாரிய துணை இயக்குநர் இரா.பூபதி ஆகியோர் தேர்வுத்துறை அலுவலர்களிடம் பேசி உரிய தீர்வு எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும் இதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி, மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் உமாமகேஸ்வரி ஆகியோரும் இப்பொருள் தொடர்பாக அரசிடம் பேசி நடைமுறை படுத்தப்படும் என்றும் அனைத்து விடைத்தாள்களுக்கான உழைப்பூதியம் (Rs.7.50 to Rs.10) ரூபாய் ஏழு, பைசா ஐம்பதிலிருந்து பத்து ருபாயாகவும் கணினி அறிவியல் பாடத்திற்கு ஒரு விடைத்தாளுக்கு (Rs.3.75 to Rs.6) மூன்று ரூபாய் எழுபத்தைந்து காசுகளாக உள்ளதை ரூபாய் ஆறு என உயர்த்தி வழங்கிட உரிய கருத்துருக்கள் அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அரசு அறிவிக்கும் என்று உறுதியளித்துள்ளார் என்று ஜனார்தனன் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்