முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டில்லியில் விவசாயிகள் போராடவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      தேனி
Image Unavailable

போடி, -தேனி மாவட்டம், போடிநாயக்கனூருக்கு வந்த தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில் தில்லியில் விவசாயிகள் போராடவில்லை, விவசாயிகள் போர்வையில் வேறு நபர்கள் தான் போராடினார்கள் என தெரிவித்தார்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், போராட்டம் நடத்திய பெண்களை தரக்குறைவாக பேசியதாக, போராட்டம் நடத்தி வரும் பெண்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழக பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேரளா மாநிலம் மூணாறு சென்றார். செல்லும் வழியில் போடி நகரில் அவருக்கு போடி நகர பாரதீய ஜனதா கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அதில் பங்கேற்ற பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கேரளத்தில் தோட்ட தொழிலாளர்களாக இருக்கும் தமிழ் பெண்களை இழிவாக, கீழ்த்தரமாக பேசிய கம்யூனிஸ்ட் அமைச்சர் எம்.எம்.மணி பதவி விலக வேண்டும் என பெண்கள் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நான் செல்கிறேன். பல்வேறு போராட்டங்களை நடத்தும் தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டது குறித்து எதுவும் கூறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. கேரள அமைச்சர் மன்னிப்பு கேட்க மறுத்து வருகிறார். அவரை பதவி நீக்கம் செய்ய கேரள முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சனையில் தமிழக, கேரள கம்யூனிஸ்ட் தலைவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இலங்கை அதிபர் தில்லிக்கு வந்துள்ள சூழ்நிலையில், தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை பாரத பிரதமர் மோடி கவனத்தில் எடுத்து பேசியுள்ளார். அவருக்கு தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பிலும், மீனவர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தில்லியில் விவசாயிகள் போராடவில்லை. விவசாயிகள் எனக் கூறிக்கொண்டு சிலர் போராடினார்கள். தில்லியில் உண்மையான விவசாயிகள் உண்மையான கோரிக்கையோடு போராடியிருந்தால் மத்திய அரசு அவர்களை சந்தித்திருப்பார்கள். உள்நோக்கத்தோடு போராடினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பாதி பேர், அவர்களின் பின்புலத்தை கண்காணிக்க வேண்டிய சூழலில் இருப்பவர்கள். பிரதமர் மோடியின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட போராட்டம். விவசாயிகளின் கோரிக்கை தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கர்நாடகாவிலிருந்து காவிரி தண்ணீர் கிடைக்கவும், தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் சிறுவாணி ஆற்றில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்காமல் சுயநலமாக பந்த் நடத்தியுள்ளனர். இந்த பந்த் வெற்றி பந்த் அல்ல வெற்று பந்த்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வினர் இரு அணியாக பிரிந்து தற்போது இரட்டை இலை சின்னத்திற்காக இணைவதற்கு பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை கடத்துவதைவிட்டுவிட்டு ஒன்று சேர்கிறார்களோ இல்லையோ தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மக்கள் பணியாற்ற வேண்டும் என்றார் தமிழசை சௌந்தரராஜன்.

இந்த பேட்டியின் போது பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன், மாவட்ட குழு உறுப்பினர் மணிகண்டன், போடி நகர தலைவர் தண்டபாணி, நகர செயலாளர்கள் அழகேசன், குருநாதன், வாழவந்தான் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago