முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழ்பவானி பாசன திட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் கொப்பு வாய்க்கால்கள் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை..

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

கீழ்பவானி பாசன திட்டத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 2,09,000 ஏக்கர் பாசன நிலங்களும், 34 கசிவு நீர் திட்டத்தில் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. பாசனப்பகுதி மேன்மைத்திட்டத்தில் வேளாண்மை பொறியியல்துறை மூலம் மண் கொப்பு வாய்க்கால்கள் மேம்படுத்தி செங்கல், சிமெண்ட்கல், கருங்கல் மூலம் கடந்த 1982-83 ஆண்டு முதல் கட்டப்பட்டது. கட்டப்பட்டு 33 ஆண்டுகள் ஆன நிலையில் செங்கல், சிமெண்ட்கல் மூலம் கட்டப்பட்ட வாய்க்கால்கள் முழுவதும் சேதமடைந்து மண் வாய்க்காலாக மாறிவிட்டது.

40 சதவீதற்கு மேல்

கருங்கற்களில்  கட்டப்பட்டது 40 சதத்திற்கு மேல் சேதமடைந்து கற்கள் உடைந்து வாய்க்காலை பயன்படுத்த முடியாமல் அதனையொட்டி மண்வாய்க்கால் அமைத்து பாசனம் நடைபெற்று வருகிறது. இதனால் கொப்பு வாய்க்காலின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான நீர் முழுமையாக கிடைக்காததால் கடைமடைபகுதியில் பயிர் செய்ய தாமதமும், பாசனம் செய்ய இயலாத நிலையும் ஏற்படுகிறது.
 எனவே கீழ்பவானி பாசனதிட்டத்தில் உள்ள அனைத்து கொப்பு வாய்க்கால்களையும் வேளாண்மை பொறியில் துறை மற்றும் பாசனசபை விவசாயிகள் குழுவினருடன் வாய்க்காலை அளவீடு செய்து பழுதடைந்த கொப்பு வாய்க்காலை முழுமையாக கட்டவும், சேதமடைந்துள்ளதை சீரமைக்கவும் பாசன விவசாயிகள் பயன்பெறவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்