முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற பத்திரைக்கையாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்: கலெக்டர் மு.ஆசியா மரியம் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      நாமக்கல்
Image Unavailable

 

 

மாவட்ட செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட வேண்டுமென சென்;னை செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநரகத்திலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் பணிபுரிந்து வரும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள மாவட்ட அளவிலான, வட்டார அளவிலான மற்றும் ஒன்றிய அளவிலான செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கான இலவச மருத்துவ முகாம் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இச்சிறப்பு மருத்துவ முகாமினை கலெக்டர் மு.ஆசியா மரியம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து முகாமினை பார்வையிட்டார்.

 

 

 

மருத்துவ முகாம்

இச்சிறப்பு மருத்துவ முகாமில் தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், எலும்பு முறிவு, ஈ.சி.ஜி, ஸ்கேன், எக்கோ மற்றும் இருதய பரிசோதனை, காது மூக்கு தொண்டை மருத்துவம், சித்த மருத்துவம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொது மருத்துவம், இரத்தப்பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு இலவசமாக அளிக்கப்பட்டது. இம்முகாமில் நாமக்கல் மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.ஜி.ரமேஷ்குமார் அவர்கள் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்று பல்வேறு பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் வழங்கினர். மேலும் சேலம் கோகுலம் மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து எக்கோ மற்றும் இருதய நோய் பரிசோதனையினை மேற்கொண்டனர். சித்த மருத்துவத்துறையின் சார்பில் மூலிகை கண்காட்சி நடத்தப்பட்டு சிறப்பு பரிசோதனைகளும், மருத்துவமும் வழங்கப்பட்டது. மேலும் இம்முகாமில் பங்கேற்று பரிசோதனையை செய்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு இலவசமாக மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது. மேலும் நிலவேம்புக்குடிநீர், ஓ.ஆர்.எஸ்.கரைசல் ஆகியவையும் இலவசமாக வழங்கப்பட்டன.

 

இச்சிறப்பு மருத்துவ முகாம் நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்), இணை இயக்குநர் (நலப்பணிகள்) மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டது. இம்முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் பணிபுரிந்து வரும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள மாவட்ட அளவிலான, வட்டார அளவிலான மற்றும் ஒன்றிய அளவிலான செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவசமாக பல்வேறு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பெற்று பயன்பெற்றனர்.

இச்சிறப்பு மருத்துவ முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.கோ.ரமேஷ்குமார், எர்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.டி.இராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.அண்ணாதுரை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கி.மோகன்ராஜ், உதவி இயக்குநர் (புள்ளியியல்) நக்கீரன், சித்த மருத்தவ அலுவலர் பூபதிராஜா மற்றும் தலைசிறந்த சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஆய்வக நிபுணர்கள் மற்றும் சேலம் கோகுலம் மருத்துவமனையின் சிறப்பு இருதய மருத்துவர்கள், தீப்தி நர்சிங் கல்லூரி செவிலியர் பயிற்சி மாணவியர்கள், மாணிக்கம்பாளையம் செவிலியர் பயிற்சிப்பள்ளி துணை செவிலியர்கள், பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்