முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மின்துறை அமைச்சர் பதவி விலக கோரி சட்டப்பேரவையில் 2-வது நாளாக அமளி

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்  - தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி பதவி விலகக் கோரி அம்மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  2-வது நாளாக அமளியில் ஈடுபட்டனர்.  இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி அண்மையில் நடைபெற்றது. இதற்கு ‘பெண்கள் ஒற்றுமை’ என்ற தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர் அமைப்பு துணை நின்றது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி மற்றும் ‘பெண்கள் ஒற்றுமை’ அமைப் பினருக்கு எதிராக அமைச்சர் எம்.எம்.மணி, கடந்த சனிக்கிழமை சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

இந்த விவகாரத்தை கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் எழுப்பினர். அப்போது மணி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது பேசிய மணி, “எனது 17 நிமிட உரையில் பெண்கள் என்ற வார்த்தையை ஒருமுறை கூட பயன்படுத்த வில்லை. ஊடகங்களில் ஒரு பிரிவினர் எனக்கு எதிராக செயல்படுகின்றனர். எனது கருத்தை திரித்து வெளியிட்டுள்ள னர்” என்றார். இதனால் ஏற்காத எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.  இந்த விவகாரம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறும் போது, “இந்த விவகாரத்தில் மணி விளக்கம் அளித்துள்ளார். மேலும் வருத்தம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் கருத்தை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளன. எனவே, அவர் பதவி விலகத் தேவையில்லை” என்றார்.

இந்நிலையில் கேரள சட்டப்பேரவையில், இந்த விவகாரத்தை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நிகழ்ச்சிகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.  இந்நிலையில் இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தலையிட்டு, எம்.எம்.மணி பதவி விலகச் செய்ய வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கோரியுள்ளார். இது தொடர்பாக யெச்சூரிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago