முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளம் வயதினருக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’ : இந்திய அழகி சிருஷ்டி கவுருக்கு மகுடம்

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

மனாகுவா  - மத்திய அமெரிக்காவில் உள்ள நிகாராகுவா தலைநகர் மனாகுவாவில் நடைபெற்ற இளம் வயதினருக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சிருஷ்டி கவுர் முதலிடம் பிடித்து மகுடம் சூடினார்.

அழகிப் போட்டி
மிஸ் யுனிவர்ஸ் போட்டிகளை நடத்தி வரும் அமைப்பு இளம் வயதினருக்கான (15 முதல் 19 வயது) அழகிப் போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர்.

சிருஷ்டி கவுர்
பல்வேறு பிரிவுகளில் வெற்றிப் பெற்ற அழகிகள் 25 பேர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். உடல் அழகு, தனித்திறன் உள்ளிட்ட பிரிவுகளில் முதலிடம் பிடித்து இளம் வயது மிஸ் யுனிவர்ஸ்-ஆக மகுடம் சூடினார் சிருஷ்டி கவுர். இவர் டெல்லியைச் சேர்ந்தவர் ஆவார். முன்னதாக, இவர் சிறந்த ஆடை அலங்கார போட்டியில் முதல் பரிசு வென்றுள்ளார்.  இவருக்கு அடுத்த இடத்தில் கனடாவைச் சேர்ந்த சமன்தா பியரியும், மெக்சிகோவைச் சேர்ந்த டிராவா ஆகிய இருவரும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர். மேலும், பிரபலமான வர்கள் பிரிவில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜிரெல்லி ஆஸ்டின் மற்றும் கவர்ச்சிப் பிரிவில் கோஸ்டாரிகாவைச் சேர்ந்த நிக்கோல் ஓபான்டோ ஆகியோர் பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்