முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ-சேவை மையங்களில் மே 2 ம் தேதி முதல் கைபேசி எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  -  2-ம் தேதி முதல் அரசு இ-சேவை மையங்களுக்கு செல்வோர் தங்கள் கைபேசி எண்ணை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  இது தொடர்பாக தமிழ்நாடு மின்ஆளுமை முகமை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ,  ''தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு குழுக்களின் வாயிலாக தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த சேவை மையங்கள் மூலம் வருவாய்த்துறையின் வருமானம், வகுப்பு, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள், பல்வேறு சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகைகளுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், மின் கட்டணம், சென்னை குடிநீர், சொத்துவரி போன்றவையும் இ-சேவை மையங்களில் செலுத்தலாம்.  இச்சேவை மையங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விரைவான சேவை வழங்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அனைத்து இ-சேவை மையங்களிலும் மே 2-ம் தேதி முதல் கைபேசி எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இ-சேவை மையத்துக்கு செல்பவர்கள் தங்கள் கைபேசி எண்ணை கணினி பொறுப்பாளரிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த பின் தங்கள் கைபேசிக்கு விண்ணப்பித்த சேவைக்கான விண்ணப்ப எண், கட்டணம் குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள 155250 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்டும் சந்தேகங்கள் மற்றும் விவரங்களை 1800 425 1333 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீர்வு பெறலாம். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, சான்றிதழ் தயாரானதும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ் தயாரானதும், பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அக்குறுஞ்செய்தி வாயிலாக இணையம் வழியாக பொதுமக்கள் தங்கள் சான்ழிதற்களை பார்வையிட முடியும். எனவே, பொதுமக்கள் மே 2-ம் தேதி முதல் இ-சேவை மையங்களுக்கு செல்லும் பாது தவறாமல் தங்கள் கைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago