முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் கலெக்டர் தகவல்

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும், உள்ள கிராமத்தில் வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமை மக்களைத் தேடி வருவாய்த்துறை என்னும் அம்மா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

 பயன்பெற வேண்டுகோள்

 இம்மா திட்டத்தின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல் (உட்பிரிவு மற்றும் முழு நிலம்), உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்துக்குட்பட்ட நிலத் தாவாக்கள், முதல் பட்டதாரி சான்றிதழ், விதவைச்சான்றிதழ், குடிநீர், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களையும் இந்த முகாமில் பொதுமக்கள் மனு அளித்து, பயன்பெறுமாறு கலெக்டர் இல.சுப்பிரமணியன்கேட்டுக் கொண்டார்.

 நடைபெறும் இடங்கள்

 இன்று வெள்ளிக்கிழமை (28.04.2017) அன்று விழுப்புரம் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்: விழுப்புரம் வட்டம் விழுப்புரம் குறுவட்டத்தைச் சேர்ந்த கண்டபாக்கம் கிராமம், வானூர் வட்டம் உப்புவேலூர் குறுவட்டத்தைச் சேர்ந்த சித்தனப்பாக்கம் கிராமம், விக்கிரவாண்டி வட்டம் விக்கிரவாண்டி குறுவட்டத்தைச் சேர்ந்த ஆசூர் (தெ) கிராமம், திண்டிவனம் வட்டம் திண்டிவனம் குறுவட்டத்தைச் சேர்ந்த கோவடி கிராமம், மரக்காணம் வட்டம் மரக்காணம் குறுவட்டத்தைச் சேர்ந்த எம்.புதுப்பாகம் கிராமம், செஞ்சி வட்டம் வல்லம் குறுவட்டத்தைச் சேர்ந்த கல்லாலிப்பட்டு கிராமம், மேல்மலையனூர் வட்டம் மேல்மலையனூர் குறுவட்டத்தைச் சேர்ந்த மேல்புதுப்பட்டு கிராமம், திருக்கோவிலூர் வட்டம் திருப்பாலப்பந்தல் குறுவட்டத்தைச் சேர்ந்த கூவனூர் கிராமம், கண்டாச்சிபுரம் வட்டம் அரகண்டநல்லூர் குறுவட்டத்தைச் சேர்ந்த ஏமப்பேர் கிராமம், உளுந்தூர்பேட்டை வட்டம் எறைய+ர் குறுவட்டத்தைச் சேர்ந்த நத்தாமூர் கிராமம், கள்ளக்குறிச்சி வட்டம் கள்ளக்குறிச்சி குறுவட்டத்தைச் சேர்ந்த ஏமப்பேர் கிராமம், சங்கராபுரம் வட்டம் ஆலத்தூர் குறுவட்டத்தைச் சேர்ந்த சோழம்பட்டு கிராமம், சின்னசேலம் வட்டம் நயினார்பாளையம் குறுவட்டத்தைச் சேர்ந்த அனுமனந்தல் கிராமம் ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்